சினி பிட்ஸ்




Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 டூ:  சஞ்சய், நட்சத்திரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம். இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீராம். இவர் இயக்குநர் திருமுருகனிடம் உதவியாளராக இருந்தவர். சஞ்சய் ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர். நட்சத்திரா, சுமித்ராவின் இளைய மகள். உமாவின் தங்கை. ஊர்வசி, ராஜேஷ், மயில்சாமி, சங்கீதா பட் நடிக்கும் இப்படத்தில் டி.இராஜேந்தர், நடிகர் சிம்பு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

180 : சித்தார்த், நித்யா மேனன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம். சத்யம் நிறுவனமும் அகல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். ‘180&ரூல்ஸ் கிடையாது’ என்கிறது டைட்டில். காதலுக்குத் தடைபோட முடியாது என்பதே சங்கதி. காலம் அருமையானது. கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசிக்கிடப்பதைவிட, நிகழ் காலத்தை இனியாக்குவதே சிறப்பு என்கிற கருத்தை வலியுறுத்தும் கதை என்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். அருமையான காதல் சித்திரம் இது என்கிறார்கள்.

பெருமான் : புதுமுகம் அர்ஜுன், ஸ்ருதி ஜோடி சேர்ந்து நடிக்கும் படம். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும், படத்தில் நகைச்சுவைக்கும் குறைவு இராதாம். டீலா, லோ டீலா போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ராஜேஷ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ காமாட்சி விஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் தயாராவது குறிப்பிடத்தக்க செய்தி. (இதன் துவக்க விழாவில் பேசிய பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ‘முன்னரே ஒரு அர்ஜுன் இருப்பதால், இந்த அர்ஜுனின் பெயரை மாற்றுவது நல்லது’ என்று இயக்குநரிடம் வேண்டுகோள் வைத்தார். நல்ல யோசனைதான்.)

காதல் டூ கல்யாணம் : அறிமுக இயக்குநர் மிலிந்த் இயக்கும் படம். இவர் மணிரத்னத்திடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்பட நாயகன் சத்யா, நடிகர் ஆர்யாவின் தம்பி. திவ்யா ஸ்பந்தனா, கதாநாயகி. பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி, மௌலி, அழகம்பெருமாள், ஜான் விஜய், அனுஜா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்காக முருகனின் ஆறுபடை வீடுகளான ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம்.
கௌதம நீலாம்பரன்