TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழக அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்பவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பகுதியில் பொது அறிவு சார்ந்த அறிவியல் பாடப் பகுதியைத் தொடர்ந்து நாம் பார்த்துவருகிறோம். அந்த வகையில் கடந்த இதழில் ஒளியியல், கோளக ஆடியின் பயன்கள், ஒளி விலகல் எண், லேசர் கதிர், கண்ணாடி ஒளியிழை, கண்ணாடி ஒளியிழைப் பயன்பாடுகள் போன்றவற்றைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்.

* சூரிய நிறமாலை ஏழு நிறங்களை உடையது.
* ஊதாக்கதிர் குறைந்த ஒளிவிலகல்
எண்ணையும், குறைந்த விலகலையும், கண்ணாடியில் அதிக விலகலையும் உடையது.
* சிவப்புக்கதிர் உயர்ந்த ஒளிவிலகல்
எண்ணையும், அதிகமான விலகலையும் கண்ணாடியில் குறைந்த விலகலையும் உடையது.
* சிவப்புஒளி நீண்ட அலைநீளம் உடையது. எனவே, எச்சரிக்கை விளக்காகப் பயன்படுகிறது.
* கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 57.50        
* சூரிய நிறமாலையில் உட்கவர் நிறமாலை ஃப்ரான்ஹோபர் நிறமாலை எனப்படும்.
* ஒரு லென்சின் குவிய தூரத்தின் தலைகீழ் மதிப்பே லென்சின் திறனாகும்.
* விழிலென்சு திறன் கண்ணின் இசைவுப் படுதிறன் எனப்படும்.
* முதலில் கண்டறியப்பட்ட எளிதில் கடத்தி - பாதரசம்.
* நீலநிற ஒளி அலைநீளம் குறைவாக உள்ளதால் அதிகம் சிதறடிக்கப்படுகிறது.

மின்னியல்

* நேர்மின்சுமை, எதிர்மின்சுமை என்ற இரு மின்சுமைகள் உள்ளன.
* மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும்.
*ஒரு கண்ணாடித்துண்டைப் பட்டுடன் தேய்க்கும்போது கண்ணாடியிலிருந்து சில எலக்ட்ரான்கள் வெளியேறி பட்டுத் துணியை  அடைகின்றன.  எனவே, பட்டு எதிர் மின்னூட்டத்தையும், கண்ணாடி  நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
*எலக்ட்ரான்களை ஏற்கும் பொருள் எதிர் மின்னூட்டத்தைம், எலக்ட்ரானை இழக்கும் பொருள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகிறது.
*ஓர் உள்ளீடற்ற கோளக கடத்தியில் மின்னூட்டம் பாயும்போது மின்னூட்டம் கடத்தியின் வெளிப்புறம் இருக்கும். உட்புறம் மின்னூட்டம் இன்றி இருக்கும். எனவே, மின்னல் காரைத் தாக்கும்போது உள்புறம் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதில்லை.

மின்கலங்களின் வகைகள்

*முதன்மை மின்கலங்கள், துணை மின்கலங்கள்.
*மீண்டும் நிகழா வேதியியல் வினைகளைப் பயன்படுத்தும் மின்கலங்கள் (பசை மின்கலம்) உலர் மின்கலம், லெக்லாஞ்சி, டேனியல் மின்கலம் ஆகியவை முதன்மை மின்கலம் எனப்படும்.
*துணை மின்கலங்கள் என்பவை மீண்டும் நிகழும் வேதியியல் வினைகளைப் பயன்படுத்துபவை. இவற்றில் வேதிப் பொருள்கள் மாற்றப்படுவதில்லை. மாறாகப் புதுப்பிக்கப்படுகின்றன.

மின்னோட்டத்தின் காந்த விளைவு

*மின்னோட்டம் பாயும்போது அதைச் சுற்றிக் காந்தப்புலம் ஏற்படுகிறது என்றவர் ஒயர்ஸ்டேட்.
*மின்னோட்டம் தாங்கிய கடத்தி உண்டாக்கும் காந்தப்புலத்தின் திசையை அறிய இரு முக்கிய விதிகள் உள்ளன.

1. ஆம்பியர் நீச்சல் விதி                                                                                                  
2. மாக்ஸ்வெல் திருகு விதி

மின்காந்தத்தின் பயன்கள்

* மோட்டார்களில் பயன்படுகிறது.
* மின்சார மணிகள், தந்தி, தொலைபேசிகளிலும் இரும்பு மற்றும் எஃகுப் பொருள்களை தூக்கிச் செல்வதற்கும் பயன்படுகின்றன.
மைக்ரோபோன்: ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன.
ஒலிபெருக்கி: மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றுகிறது.

மோட்டார் விளைவு

*மின் மோட்டார் என்பது மின் ஆற்றலை எந்திர ஆற்றலாக மாற்றுவது.
*காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னோட்டம் தாங்கிய கடத்தி மீது செயல்படும் விசையின் திசையை அறிய ஃப்ளமிங் இடக்கை விதி பயன்படுகிறது. உதாரணம்: மின் மோட்டார், கால்வனா மீட்டர், ஃபேன், மிக்ஸி, வாசிங் மெசின் மற்றும் பலபொது அறிவு சார்ந்த மேலும் பல பயனுள்ள தகவல்களை அடுத்த இதழிலும் காண்போம்…

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்