MBA படிக்க CMAT 2019 நுழைவுத் தேர்வு!



நுழைவுத் தேர்வு

இந்தியாவில் உள்ள மேலாண்மைக் கல்லூரிகளில் MBA (Master of Business Administration) மற்றும் PGDM (Post Graduation Diploma in Management) படிப்புகளுக்கு தகுதியான மாணவர்கள் சேர்க்கைக்கான Comman Management Admission Test-CMAT-2019 தேர்வை National Testing Agency நடத்த உள்ளது.

கல்வித் தகுதி: இத்தேர்விற்கு இந்தியக் குடியுரிமை உடையவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க இயலும். எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். உச்ச வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வு எழுத விரும்புவோர் www.nata.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர் ரூ.1400, அனைத்துத் தரப்புப் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.700 செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 3.11.2018.

தேர்வு முறை: ஆன்லைனில் 28.1.2019 அன்று நடைபெற உள்ள இத்தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். இதில் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான 100 வினாக்கள் இருக்கும். ஒரு பிரிவிற்கு 100 மதிப்பெண்கள் என்று மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு 4 பிரிவுகள் இருக்கும்.

குவாண்டிட்டேட்டிவ் ஆப்டிடியூட், லாங்குவேஜ் காம்ரஹென்ஷன், லாஜிக்கல் அண்ட் அனாலிட்டிக்கல் ரீசனிங், ஜெனரல் அவேர்னஸ் என்ற பிரிவுகளில் தலா 25 வினாக்கள் இருக்கும். சரியான வினாவிற்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். விடையளிக்காத வினாக்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது. தேர்வு முடிவுகள் 10.2.2019 அன்று வெளியிடப்படும்.

ஆன்லைன் வழியாக நடைபெறும் இத்தேர்வில், குழு கலைந்துரையாடல் (Group Discussion), நேர்காணல் (Personal Interview), எழுத்து நுண்ணறிவுத் தேர்வு (WAT- Written Aptitute Test) ஆகியவை இருக்கும். இத்தேர்வின் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.மேலும் விவரங்களை அறிய www.nata.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வசந்தி ராஜராஜன்