வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

மத்திய அரசில் எஞ்சினியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையமான யு.பி.எஸ்.சி-யின் வேலை வாய்ப்பு அறிவிப்பு
வேலை: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்
ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனி
கேஷன் துறைகளில் எஞ்சினியரிங் சேவை
காலியிடங்கள்: மொத்தம் 581
கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் டிகிரி அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 21 - 30
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம். முதன்மைத் தேர்வு வரும் 6.1.19 அன்று நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.10.18
மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in

எல்லைக்காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி!

நிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைக்காவல் படையில் வேலை
வேலை: சப் - இன்ஸ்பெக்டர் பதவியிலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 224. இதில் பொதுப்பிரிவினருக்கு மட்டுமே 213 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 32க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, உடற்தகுதி, மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.10.18
மேலதிக தகவல்களுக்கு: www.bsf.nic.in

தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களில் வேலை!

நிறுவனம்: ஐ.சி.டி.எஸ். எனப்படும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் வேலை. இந்த வேலைவாய்ப்புகளில் பொதுப்பணித் துறையில் உள்ளோருக்கும் பாதியளவு இடமுண்டு
வேலை: டிஸ்ட்ரிட்க்ஸ் கோவார்டினேட்டர், டிஸ்ட்ரிட்க்ஸ் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் ப்ளாக் கோவார்டினேட்டர்/ ப்ளாக் கோவார்டினேட்டர் மற்றும் ப்ளாக் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் எனும் 4 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 178. இதில் முதல் மற்றும் இரண்டாம் பிரிவில் 6 இடங்கள், மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவுகளில் தலா 83 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35 வயதுக்குள். மற்ற பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.10.18
மேலதிக தகவல்களுக்கு: www.icds.tn.nic.in

பெட்ரோலிய நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை: அசிஸ்டென்ட் ப்ராசஸ் டெக்னீஷியன், ஃபையர் ஆபரேட்டர் உட்பட மேலும் 5 துறைகளில் வேலை. மேற்சொன்ன இரு வேலைகளில் மட்டுமே அதிகபட்ச காலியிடங்கள் உண்டு
காலியிடங்கள்: மொத்தம் 122. இதில் ப்ராசஸ் டெக்னீஷியன் வேலையில் 67, ஃபையர் ஆபரேட்டர் வேலையில் 19 இடங்கள் உண்டு
கல்வித் தகுதி: ப்ராசஸ் டெக்னீஷியன் வேலைக்கு பி.எஸ்சி., வேதியியல் அல்லது கெமிக்கல் எஞ்சினியரிங். ஃபையர் ஆபரேட்டர் வேலைக்கு 10வது படிப்புடன் ஃபையர் தொடர்பான சான்றிதழ் படிப்பு. மற்ற வேலைகளுக்கு பாய்லர் படிப்பு, எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிப்பு, இன்ஸ்ட்ரூமென்டேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் டிப்ளமோ படிப்பு போன்றவை மற்ற வேலைகளுக்கு தகுதியாக கேட்கப்பட்டுள்ளன
வயது வரம்பு: 18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.10.18
மேலதிக தகவல்களுக்கு: www.hindustanpetroleum.com

ஜிப்மர் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: புதுச்சேரியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் எனும் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் வேலை

வேலை: புரொபசர், அடிஷனல் புரொபசர், அசோசியேட் புரொபசர் மற்றும் அசிஸ்டென்ட் புரொபசர்
காலியிடங்கள்: முதல் வேலையில் 22, இரண்டாம் வேலையில் 18, மூன்றாம் வேலையில் 22 மற்றும் நான்காவது வேலையில் 44 இடங்கள் காலியாக உள்ளது
வயது வரம்பு: முதல் இரண்டு வேலைகளுக்கு 58க்குள்ளும் மூன்றாம் நான்காம் வேலைகளுக்கு 50க்குள்ளும் இருத்தல் அவசியம்
கல்வித் தகுதி: மருத்துவப் படிப்பில் முதுகலைப் பட்டம்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.10.18
மேலதிக தகவல்களுக்கு: www.jipmer.puducherry.gov.in

+2 முடித்தவர்களுக்கு டாடா மருத்துவ மையத்தில் வேலை!

நிறுவனம்: டி.எம்.சி எனச் சுருக்கமாக அழைக்கப்
படும் டாடா மெமோரியல் சென்டர். இந்த மையம் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனங்களை நாடு முழுவதும் அமைத்திருக்கிறது
வேலை: இந்நிறுவன மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத பல்வேறு வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 371. இதில் வாரணாசியில் உள்ள ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனையில் 168,கவுஹாத்தியில் உள்ள புவனேஸ்வர் பரூக் புற்றுநோய் மையத்தில் 61, விசாகப்பட்டினத்தில் உள்ள பாபா புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் 117 இடங்களும், சண்டிகாரில் உள்ள டி.எம்.சி
புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 25 இடங்களும் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத வேலைகள் இருப்பதால் +2, துணை மருத்துவத்தில் டிப்ளமோ படித்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: வேலை பிரிவுகளுக்கு ஏற்ப வயது வித்தியாசப்படும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.10.18
மேலதிக தகவல்களுக்கு: https://tmc.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்