இளநிலை வடிவமைப்புப் பட்டம் படிக்க UCEED 2019 நுழைவுத் தேர்வு!



நுழைவுத் தேர்வு!

இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி பாம்பே (IIT - Bombay), ஐ.ஐ.டி கவுஹாத்தி (IIT - Gawhati), ஐ.ஐ.டி.டி.எம். ஜபல்பூர் (IITDM - Jabalpur) ஆகியவற்றில் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (Bachelor of Design -  B.Des) கற்பிக்கப்படுகிறது.

ஆடை தொடங்கி ஆகாய விமானம் வரை வடிவமைப்புப் படிப்புக்கான தேவை உள்ளது நாம் அறிந்த ஒன்றுதான். இப்பட்டப்படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான (Under Graduate Common Entrance Examination for Design-2019) UCEED-2019-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தகுதி

இந்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடப் பிரிவு எடுத்து ேதர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க இயலும். 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும், 2019 ஆம் ஆண்டு இறுதித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவினர் அல்லது நான் கிரீமி லேயர் பிற பிற்படுத்தப்பட்டவர் அக்டோபர் 2, 1994 அன்று அல்லது அதற்கு பின்னும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அக்டோபர் 2, 1989 அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும்.
இத்தேர்வை தொடர்ந்து இருமுறை மட்டுமே எழுத இயலும். இத்தேர்வின் மதிப்பெண் ஓர் ஆண்டிற்கு மட்டுமே அனுமதிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.uceed.iitb.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2018. தாமதக் கட்டணமாக ரூ.500 செலுத்தி 16.11.2018 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய அனைத்துத் தரப்பு பெண்கள் ரூ.1,200, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.1,200, மற்றவர்கள் ரூ. 2,400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

சார்க் (SAARC) நாட்டினர் 160 USD, சார்க் நாடு தவிர்த்த மற்ற அயல்நாட்டு மாணவர் 300 USD செலுத்த வேண்டும். துபாய் மையத்தில் தேர்வு எழுத விரும்பும் இந்திய மாணவர்கள் 160 USD செலுத்த வேண்டும்.
அட்மிட் கார்டு 1.1.2019 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த அட்மிட் கார்டில் ஏதேனும் தவறு இருப்பின் 5.1.2019-க்குள் சரி செய்துகொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு

கணினி வழியான இத்தேர்வு 19.1.2019 அன்று முற்பகல் 10 மணிக்கு தேர்வு நடைபெறும். இது 3 மணி நேரத் தேர்வாகும். ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளில் 3 பிரிவுகளுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும்.
பிரிவு A : (Numerical Answer Type) நியூமரிக்கல் ஆன்ஸர் வடிவமாகும். இதற்கு வெர்ச்சுலர் கீ வழியாக விடை தரவேண்டும்.
பிரிவு B : சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். விடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் இருக்கும்.
பிரிவு C: ஒரே ஒரு சரியான விடையுள்ள ‘சரியான விடையைத் தேர்வு செய்யும்’ முறையில் இருக்கும்.

 நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம்

இத்தேர்வை எதிர்கொள்ள பின்வரும் பாடத்திட்டங்களை படிக்க வேண்டியது அவசியமாகும்.  

  VISUALIZATION AND SPATIAL ABILITY
Pictorial and diagrammatic questions to test, understanding of transformation and/or manipulation of 2D shapes and 3D objects and their spatial relationships, knowledge of practical and everyday mechanical and scientific concepts.

OBSERVATION AND DESIGN SENSITIVITY
Ability to detect concealed properties in ordinary things, people, situations, and events, and thinking critically about them. Applying attention to certain details, analysing, reasoning, classifying, inferring and predicting. Ability to discern subtle differences in visual properties and aesthetic outcomes.

ENVIRONMENTAL AND SOCIAL AWARENESS
 General awareness of environmental factors such as climate, population, water, vegetation, pollution, weather, natural resources etc., and their implications on the design of products, images, infrastructure and environment. Awareness of social and cultural connection with design, history of the designed artefact, and socially responsible and environmentally sustainable design responses. History of art, sculpture and literature.

ANALYTICAL AND LOGICAL REASONING
Ability to look at information, be it qualitative or quantitative in nature, and discern patterns within the information. Ability to weigh opinions, arguments or solutions against appropriate criteria. Ability to check for hidden bias or hidden assumptions and whether evidence and argument support conclusions. Ability to use logic and structured thinking to deduce from a short passage, which of a number of statements is the most accurate response to a posed question. Data Interpretation, brainteasers, and patterns.

LANGUAGE AND CREATIVITY
Ability to understand and use Standard English. Reading comprehension, knowledge of English grammar. Ability to think creatively in terms of alternatives, ability to distinguish innovative options and think out of the box.

DESIGN THINKING AND PROBLEM SOLVING
Ability to use visual analogies, metaphors, signs and symbols. Ability to understand complexity, identify problem, generate alternatives, evaluate options and select solutions.  

மேற்கொண்டு முழு விவரங்களை அறிய www.uceed.iitb.ac.in. என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.