முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்



Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            அதர்வா முரளி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியச் செல்கிறார். அவரை அந்த நிறுவனம் பெங்களூருக்கு அனுப்புகிறது. அங்கே ஒரு பிராஜெக்ட் பார்ட்னராக அமலாபாலைச் சந்திக்கிறார் அதர்வா. இருவரும் ஒரே பிளாட்டில் தங்கி, நெருங்கிப் பழக, அதர்வா மனத்தில் காதல்.

அமலாபால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததெல்லாம் ஒரு நிர்வாகப் பயிற்சிக்காகத்தான். அவர் பெரும் பணக்காரர். அவருடைய தந்தை அமலாபாலை அமெரிக்காவுக்கு அழைத்து, திருமண ஏற்பாடும் செய்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அமலாபால் சென்னை வருகிறார். இப்போது அவருடைய சொந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார் அதர்வா. அமலாபாலை அவருக்கு அடையாளமே தெரியவில்லை. ஒவ்வொரு சனி, ஞாயிறும் அதர்வா பெங்களூர் சென்று விடுகிறார். கேட்டால், என் காதலியைச் சந்திக்க என்கிறார்.

அமலாபாலைப் பிரிந்த நினைவே இல்லாமல், அவர் தன்னுடன் இருப்பதாகவே எண்ணி, முப்பொழுதும் காதல் கற்பனையில் சஞ்சரிக்கிறார் அதர்வா. இதை  அமலாபாலே கண்டுபிடித்துக் கண்கலங்குகிறார். அவரைக் காதலிப்பதா? அமெரிக்க மாப்பிள்ளையை மணப்பதா என்று அவருக்கு சிக்கல்.

அதர்வாவின் வியக்க வைக்கும் மனநோய் அருமையான கதைக்கு வழிவகுக்கிறது. அவருடைய அம்மா பாச பிளாஷ்பேக், கலங்காத மனத்தையும் கலங்க வைத்துவிடும். எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சிகளில் அதர்வா விளாசித் தள்ளுகிறார்.

என்றும் இனிக்கும் காதல் கற்பனை.
- கௌதம நீலாம்பரன்