ராட்சத அணைஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வீற்றிருக் கிறது கிளன் கேன்யான் டேம். அமெரிக்காவிலேயே இரண்டாவது உயர்ந்த கான்கிரீட் ஆர்ச் டேம் இதுதான். 1956-இல் அணைகட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1966-இல் அணை திறக்கப்பட்டது. அப்போதே கட்டுமான செலவு 135 மில்லியன் டாலர்.
தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படப் படப்பிடிப்புக்கான முக்கிய ஸ்பாட்டாக இந்த அணை திகழ்கிறது. தவிர, இதன் பிரமாண்டத்தை ரசிக்க லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் குவிகின்றனர்.