கொமோடோ தீவு



சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடு இந்தோனேஷியா. அந்தத் தீவுகளில் ஒன்று கொமோடோ. பூமியிலேயே மிகப்பெரிய பல்லியான கொமோடோவின் வீடாக இந்தத் தீவு கருதப்படுகிறது.
390 சதுர கிலோ மீட்டர்  பரப்பளவில் விரிந்திருக்கும் கொமோடாவில் இரண்டாயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். கொமோடோ தீவின் கடற்கரை மணல் பிங்க் வண்ணத்தில் இருப்பது இதன் சிறப்பு. உலகில் இப்படி பிங்க் வண்ண கடற்கரைகள் ஏழு இடங்களில் மட்டுமே உள்ளன.