சூர்யகலா



தேவையான பொருட்கள்

சந்திரகலாவிற்கு கூறியதுபோல மைதா - 1 கப், நெய் - 1 டீஸ்பூன். குக்கிங் சோடா சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 2 கப் சர்க்கரையில் 2½ கப் தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வந்ததும் லெமன் சாறு பிழிந்து இறக்கி விடவும்.பூரணத்திற்குமுந்திரி, பாதாம், பிஸ்தா - 2 டீஸ்பூன் (தனித்தனியாக) 2 டீஸ்பூன் பொடித்துக் கொள்ளவும். ஏலக்காய் - சிறிதளவு, சர்க்கரை பொடி - 1/2 கப் கோவா - 1 கப்.

செய்முறை

முதலில் பூரணத்திற்கு பருப்பு வகைகளை பொடித்துக்கொண்டு பூரணத்திற்கு கூறிய பொருட்களை சேர்த்து பிசைந்துகொள்ளவும். இனி சிறு பூரிகளாக
இட்டுக்கொண்டு ஒரு பூரியில் பூரணத்தை வைத்து மேலே இன்னொரு பூரி கொண்டு மூடி ஓரங்களை அழுத்தி மூடி மடித்து விடவும். அதனை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் 5 நிமிடம் ஊற விட்டு எடுத்து பரிமாறவும்.