ஏவி.எம்மின் பெருந்தன்மை!



வி.சி.குகநாதன்! தவிர்க்கமுடியாத சினிமா இயக்குனர். தமிழ் மட்டுமன்றி இந்திய மொழிகளில் 250 படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். தமிழ் சினிமாவின் பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை ராணி மைந்தன் எழுதியிருக்கிறார். அதிலிருந்து...

இலங்கையில் உள்ள புங்குடு தீவில், செல்லையா - ராஜேஸ்வரி தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர் குகநாதன். முழுப்பெயர் குகானந்தன்.குகநாதனின் கல்லூரிப் படிப்பு காஞ்சியில் தொடங்கியது.அந்த நாடகப் போட்டியில் சுமார் முப்பது நாடகங்கள் கலந்து கொண்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ‘சிறந்த நடிகருக்கான விருதினைப் பெறுபவர் குகநாதன்’ என்று அறிவித்தார்கள்.

பச்சையப்பன் கல்லூரிக்கு ஒரு முறை எம்.ஜி.ஆர். வருகை தந்து விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவருக்கு குகநாதன் ஒரு மாணவர் தலைவன் என்ற முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் குகநாதன் பேசியதை எம்.ஜி.ஆர். அவர்கள் விரும்பி ரசித்துக் கேட்டார்.

மறுநாள் எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து வந்த சிலர் குகநாதனை அவரிடம் அழைத்துக் கொண்டு சென்றார்கள். சத்யா ஸ்டுடியோ! அப்போது அங்கே எம்.ஜி.ஆர். ஒப்பனை அறையில் பீதாம்பரம் அவர்களிடம் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.‘வணக்கம். வாங்க’ என்று அவரே முந்திக் கொண்டு குகநாதனை வரவேற்றார்.

குகநாதனை ஏவி.எம் அவர்கள் அழைத்தார். “இதோ பாருங்கள். பங்குதாரர்களாக நாம் படம் எடுத்தோம். ஆறு லட்சம் ரூபாய் நஷ்டம். ஆளுக்கு மூன்று லட்சம். ஆனால் நீங்கள் இப்போது தரவேண்டாம். மறுபடியும் படம் எடுக்கும்போது பார்க்கலாம். மனதைத் தளர விடாதீர்கள். போய் வேலையைப் பாருங்கள்” என்று பெருந்தன்மையோடு சொல்லி அனுப்பினார்.

ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்தபோது பேச்சுவாக்கில், “என் ரசிகனான நீங்கள் ஏன் என்னை வைத்துப் படமெடுக்க நினைக்கவில்லை?” என்று கேட்டார். அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத குகநாதன், “நீங்கள் எனக்குக் கடவுள் மாதிரி.

உங்கள் படத்துக்கு நான் முதலாளி ஆவதா?” என்று கண்கலங்க பதில் சொன்னார்.
தன்னுடைய முதல் தயாரிப்பான ‘சுடரும் சூறாவளியும்’ படத்தில் தெலுங்குக்கார ஹீரோவான சந்திரமோகனுக்கு கமலை ‘டப்பிங்’ பேச வைத்தார் குகநாதன்.

பின்னர், ‘அன்புத் தங்கை’ படத்தில் ஜெயலலிதா அவர்களோடு ஒரு பாடல் காட்சியில் புத்தபிக்குவாக கமல் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் குகநாதனும் ஒருவர்.அந்த விழாவில் இளையராஜா உரையாற்றியபோது, “இங்கே ரொம்பவும் அமைதியா உட்கார்ந்திருக்கிற குகநாதன் சாதாரண ஆளில்லே. அவர்தான் என்னை இசையமைப்பாளர் ஆக்க முதன் முதலில் முயற்சி செய்தார். அது மட்டுமல்ல, ‘சலங்கை ஒலி’ படத்தின் கதையை எழுதியவரும் அவர்தான் என்று இரண்டு உண்மைகளை அங்கே போட்டுடைத்தார்.

ஆசிரியர் - ராணி மைந்தன், விலை - ரூ 200, பக்கங்கள் - 224,  கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17.