அதென்ன கிண்ணமா?



சரோஜாதேவி பதில்கள்

* சிகப்பா, கருப்பா - எது அழகு?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நிறத்துக்கும், தாம்பத்தியத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

* வலிமையான ஆண்கள் கூட காதலில் மென்மையாகி விடுகிறார்களே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
யாராலும் அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளையாக இருந்தாலும், பசுவிடம் பாச்சா பலிக்காது.

* கன்னம் தேன் கிண்ணம்தானே?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அது என்ன கிண்ணம் மாதிரியா இருக்கு? கன்னத்தை கிண்ணம் என்று எதுகை மோனைக்கு சொன்னது.

* உங்ககிட்டே எத்தனை கேள்வி கேட்டாலும் அலுப்பே தெரியாம ஆனந்தமா இருக்கே, ஏன்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
ரெண்டு பேரும் அவ்வளவு எனர்ஜியோட இருக்கோம்னு அர்த்தம்.

* பெண்களை மயக்குவது எப்படி?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
சத்தியமாக ஓர் ஆணால் முடியாது. பெண்ணே மனமிரங்கி மயங்கியதுபோல நடித்தால்தான் உண்டு.