காலம் கனிந்தது கதவுகள் திறந்தது!



இப்போதைய ‘மீ டூ’ பரபரப்புக்கெல்லாம் இனிஷியல் போட்ட அந்த ரெட்டி நடிகை, சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.அக்கட தேசத்து பிரபலங்கள் மீது வைத்த ‘அத்தகைய’ குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பெருசாக பலன் இல்லையாம். அவர் எதிர்பார்த்த விளைவுகள் அமையவில்லையாம்.

எனவே -கோலிவுட் பிரபலங்களைப் பற்றி மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.அவரது வாயை அடைக்க உடனே படவாய்ப்பு, லட்சங்களில் சம்பளமென்று கிடைத்துவிட்டதாம்.இப்போது அம்மணி சொகுசு பங்களாவில் தங்கியிருக்கிறார்; ஆடம்பரமான காரில் வலம் வருகிறார் என்று வியக்கிறார்கள் கோடம்பாக்கம் வாசிகள்.

இதெல்லாம் யாருடைய உபயம் என்று கேட்டால் ‘முனி’யை கை காட்டுகிறார்கள். அப்படியா மாஸ்டர்?

- விட்டலாச்சார்யா