வாய்ப்புகள்



வேலை ரெடி!

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு சீனியர் எக்சிகியூட்டிவ் பணி

நிறுவனம்: காதி அண்ட் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் கமிஷன் எனும் மத்திய அரசின் காதி மற்றும் கிராமத் தொழிற்சாலை ஆணையத்தில் வேலை
வேலை: அசிஸ்டென்ட் டைரக்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ் போன்ற பல்வேறு துறைகளில் குரூப் வாரியான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 342.
கல்வித்தகுதி: மேற்குறிப்பிட்ட வேலைகளுக்கு பி.இ. அல்லது பி.டெக் அல்லது முதுகலைப் பட்டப்படிப்புகள் அவசியம்
வயது வரம்பு: டைரக்டர் வேலைக்கு 35க்குள்ளும், சீனியர் எக்சிகியூட்டிவ் வேலைக்கு 30க்குள்ளும், எக்சிகியூட்டிவ் வேலைக்கு 27க்குள்ளும் இருத்தல் அவசியம்தேர்வு முறை: ஆன்லைனில் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.kvic.org.in

மத்திய அரசுத் துறைகளில் ஜூனியர் எஞ்சினியர் பணி

நிறுவனம்: எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் மத்திய அரசுத் துறைகளுக்கான பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: குரூப் ‘பி’ அடிப்படையிலான ஜூனியர் எஞ்சினியர் வேலை. இதில் சிவில், மெக்கானிக்கல், க்வான்டிட்டி சர்வே மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைகள் அடங்கும்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித்தகுதி: குறிப்பிட்ட வேலைப் பிரிவுகள் தொடர்பாக எஞ்சினியரிங் படிப்பில் டிகிரி
அல்லது டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: க்வான்டிட்டி சர்வே வேலைக்கு மட்டும் 27க்குள்ளும் மற்ற வேலைகளுக்கு 32க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.ssc.nic.in

ஐதராபாத் ஐ.ஐ.டி-யில் டெக்னிக்கல் சூப்பிரண்டண்ட் வேலை

நிறுவனம்: ஐ.ஐ.டி. ஐதராபாத்
வேலை: டெக்னிக்கல் சூப்பிரண்டண்ட், ஜூனியர் டெக்னீஷியன், எக்சி கியூட்டிவ் அசிஸ்டென்ட் உட்பட 23 பிரிவுகளில் நான்- டீச்சிங் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 114
கல்வித்தகுதி: வேலைத் தொடர்பான பிரிவுகளில் டிகிரி படிப்பு
வயது வரம்பு: வேலைகளைப் பொறுத்து வயது உச்சவரம்பு 45, 50, 55 என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.iith.ac.in

இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: ஐ.ஓ.சி.எல். எனப்படும் இண்டியன் ஆயில் கம்பெனி லிமிடெட்
வேலை: ஹ்யூமன் ரிசோசர்ஸ், குவாலிட்டி கன்ட்ரோல் உட்பட 11 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 221. இதில் அதிகபட்சமாக ஹ்யூமன் ரிசோசர்ஸ் ஆஃபிசர் 50, குவாலிட்டி கன்ட்ரோல் ஆஃபிசர் 44, ஃபையர் சேஃப்டி ஆஃபிசர் 50, கைனகாலஜிஸ்ட் 44 மற்றும் பாயிலர் எஞ்சினியர் 33 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எம்.பி.ஏ அல்லது தொழிலாளர்/ தொழிற்சாலை தொடர்பான படிப்பு
களில் முதுகலைப் படிப்பும், குவாலிட்டி வேலைக்கு ரசாயனவியலில் பிஎச்.டி படிப்பும், ஃபையர் வேலைக்கு பி.இ. அல்லது பி.டெக், கைனகாலஜிஸ்ட் வேலைக்கு எம்.பி.பி.எஸ், பாயிலர் வேலைக்கு பி.இ. அல்லது பி.டெக் படிப்பு
வயது வரம்பு: ஹ்யூமன் ரிசோசர்ஸ் வேலைக்கு 28க்குள்ளும், குவாலிட்டி கன்ட்ரோல் வேலைக்கு 32க்குள்ளும் இருத்தல் அவசியம். மற்ற வேலைக்கு நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

+2 படிப்புக்கு ராணுவத்தில் வேலை

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் எனும் 4 வருட பயிற்சிக்குப் பிறகான அதிகாரி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 90
கல்வித்தகுதி: +2-ல் அறிவியல் பாடங்களை எடுத்து படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 16 1/2 லிருந்து 19 1/2 வரை
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

CISF-ல் டிரேட்ஸ்மேன் பணி

நிறுவனம்: சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ்(மத்திய
அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படை)
வேலை: கான்ஸ்டபிள் பதவியிலான டிரேட்ஸ்மேன் வேலை. பார்பர், குக், கார்பெண்டர், பெயின்டர் உட்பட 11 பிரிவு
களில் வேலைகாலியிடங்கள்: மொத்தம் 378
கல்வித்தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 18 - 23
தேர்வு முறை: உயரம், உடல் திறன் போன்றவற்றில் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.11.17
மேலதிக தகவல்களுக்கு: www.cisfrectt.in