அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபிபராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர்.    சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அதைக்கொண்டு அவன் உலகமக்களின் பசிப் பிணியைத் தீர்த்ததாகவும் தமிழ்க் காப்பியமான மணிமேகலை கூறுகிறது.

சரஸ்வதியின் ஆலயத்தைக் கலைநியமம் என்பர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திலுள்ள சரஸ்வதி சந்நதி கலைநியமம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்தாதேவி எனும் பெயரில் வீற்றிருக்கும் சரஸ்வ தியே ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அளித்து அருள்பாலித்தவள் ஆவாள்.