உள்ள(த்)தைச் சொல்கிறோம்



மஹாளயம் பற்றிய கட்டுரை விரிவாகவும், மிகத் தெளிவாகவும் இருந்தது. பல
விஷயங்கள், புதிய தகவல்களாக இருந்தது.
 - கே.அம்புஜவல்லி, புத்தூர்.

சிற்பமும் சிறப்பும் பகுதியில், ஓணத் திருநாள் உலகளந்த பெருமாள் பற்றிப் படித்தேன். குஜராத் மாநிலத்தில் ராணி உதயமதி, தன் கணவர் நினைவாக கட்டியது, அஷ்டபுஜ விஷ்ணுவடிவ திருவிக்ரமர் பற்றிய தகவல் அடேயப்பா படிக்க படிக்க பக்தி பரசவம்தான். அந்த நடுப்பக்க  வண்ண சிற்பங்களை என் கண் முன்பு கொண்டு வந்தது மறக்க முடியாதது நன்றிகள்!  மேலும், ‘நெல்லையப்பர் ஆலயமும் சிற்ப பொக்கிஷங்களும்’ படித்தேன். உலரப்  போட்டிருந்த நெல் மழையினால் நனையாத வாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றிய  நெல்வேலிநாதர் என இந்த இறைவனின் புராணத்தை பற்றி அறிந்தேன். நீங்கள் தந்த இச்சிற்பங்கள் பாண்டிய நாட்டுக் கலை பொக்கிஷத்தை கண்டு மெய் சிலிர்த்தேன்.  எப்போதும் போல, ஆன்மிகம் கலக்கிவிட்டது.
 - வண்ணை கணேசன், சென்னை.

ஓணம் பண்டிகை குறித்து அறியப்படாத பல அரிய தகவல்கள், மஹாளய பட்சம் குறித்த விவரங்கள், லேமினேஷன் செய்யப்பட்ட அனுதினமும் வணங்கத்தக்க விநாயகர் வண்ணப்படம் என இன்ப அதிர்ச்சி வழங்கி விட்டீர்கள்!
 - கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

கேரள மக்கள் திருவோணப் பண்டிகையினை குதூகலமாக ஏன்? கொண்டாடுகிறார்கள் என்பதை திரு.பாரதிநாதன் காரண காரியங்களோடு விளக்கியிருப்பது பக்தர்களை அக்காலக் கட்டத்திற்கு உணர்வுப் பூர்வமாக அழைத்துச் சென்று விட்டது.
 - ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புத்தூர்.

`ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடுவோம்’ என்ற அற்புதமான தலைப்பில் வாமன ஜெயந்தி, திருஓணம் பண்டிகை இரண்டையும் இணைத்து வாமன அவதாரத்தின் மகத்துவங்களையும், ஓணம் பண்டிகையின் வரலாற்றையும் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. மஹாளயம் என்றால் என்ன? என்ற வினா தொடங்கி, அமாவாசை மஹாளயம், சுப தினமா? அசுபதினமா? என்ற கேள்வி வரை மகத்தான புண்ணியம் அருளுகின்ற மஹாளய அமாவாசை பற்றிய ஐயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் தந்து, மஹாளயத்தின் 30 மகத்துவங்களைத் தொகுத்து எஸ். கோகுலாச்சாரி வழங்கிய கட்டுரை வெகு அற்புதம். மகத்தான ஆன்மிக சேவை என்று இதனைப் போற்ற வேண்டும்.
 - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பலமுறை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திற்குச் சென்று வந்திருந்த போதிலும், அந்த ஆலயத்திலுள்ள நான்கு அதிசய விநாயகர்கள் பற்றிய தகவல்களை ஆன்மிகம் பலன் வாயிலாகத்தான் நான் அறிந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்.
 - இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

`ஸ்ரீராமனின் தாத்தா’ என்று கட்டுரையின் தலைப்பை படித்தவுடனே, இது நிச்சயம் வித்தியாசமான கட்டுரைதான் என என் மனதிற்குள் தோன்றியது. அதேபோல, நான் எங்கும் படித்திராத கட்டுரை. இளவரசியின் சுயம்வர விழா இப்படித்தான் நடந்திருக்கும் என்று நம் கண் முன் காட்டியது.
 - பிரசன்னா, நாமக்கல்.

தற்காலத்திற்கு தேவையான ஒன்று ``திருப்தி பெறுவது”. திருப்தி என்னும் செல்வம்தான் மிகபெரிய செல்வம் என்னும் கட்டுரையை மிக அற்புதமாக, எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன் வாழ்த்துகள்.
 - மோகன், காஞ்சிபுரம்.