என்னை கல்யாணம் செய்துக்குங்க கோலி!
இன்றைக்கு குளோபல் சேஸிங் சிங்கம் விராட் கோலிதான். ஆக்ரோஷமானால் பவுலர்கள் வீசும் பந்து ஆகாயத்திற்கு பறக்கும்.
 இத்தனை பெருமை இருந்தும் விராட் கோலிக்கு உலக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக வருந்திய கொலவெறி கோலி ஃபேனின் ஆதங்க பேனர்தான் மேலேயுள்ள தலைப்பு. லாகூரில் நடைபெற்ற உலக லெவன் Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பலரும் பலவித பேனர்களை வைத்திருந்தனர்.
ஆனால், பாகிஸ்தான் போலீஸ்காரர் ‘மேரி மீ கோலி’ என்று வைத்திருந்த பேனர்தான் செம சென்சேஷனல் ஆனது. பின்னே... பெண்கள் வைத்திருக்கும் பேனரை ஆண் ஒருவர் வைத்திருந்தால்..? இணையமே கிச்சு கிச்சு மூட்டியது போல குலுங்கிக் குலுங்கி சிரிக்க... போலீஸ் போட்டோ ஆஹா ஓஹோ ஹிட். இதே டயலாக்கை நடிகை அனுஷ்கா சர்மா சொன்னா இந்தியாவே மகிழ்ச்சி அடையாதா?!
|