பசுமைத் திரைப்படம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

குற்றத்தை வேடிக்கை பார்க்காமல் திருடனைப் பிடித்துக் கொடுத்த சூர்யா, சூப்பர்யா!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜவஹர்பிரேம்குமார், பெரியகுளம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; தேவா, கதிர்வேடு; முத்துவேல், கருப்பூர்; பூதலிங்கம்,  நாகர்கோவில்; ராஜ்குமார், குன்னூர்.

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வந்தால் ரசிகர்களின் மோதல் அதிகரிக்கும் என்று சொன்ன பி.சி.ராமின் பேட்டி கருப்புவெள்ளையில் மிளிர்ந்தது.
- மனோகர், கோவை; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; முருகேசன், கங்களாஞ்சேரி; தேவா, கதிர்வேடு.

உளவியல் பலவீனங்களை எப்படி முன்னேற்ற ஏணியாக பயன்படுத்திக்கொள்வது என்று சொன்ன எலன் மஸ்க்கின் வாழ்க்கை ஆச்சரியம்!
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

சீரியல் ரைட்டர் குமரேசனின் வாழ்க்கையைப் படித்து நெகிழ்ந்துபோனோம்.
- முத்துவேல், கருப்பூர்; சைமன்தேவா, விநாயகபுரம்.

மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி காரணமாகத்தான் காலேஜ் ரோடு என்று பெயர் வந்தது என ‘தலபுராணம்’ கூறிய தகவல் புத்தம்புதிது.
- ஆனி அஞ்சலின், சென்னை; வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு; முத்துவேல், கருப்பூர்.

‘ஊஞ்சல் தேநீரி’ல் பாரதியார் - பாரதிதாசனை சரியாகக் கணித்த கவிஞர் தமிழன்பன் பிரமிப்பூட்டுகிறார்.
- சு.நவீனாதாமு, திருவள்ளூர்.

காவல்துறையின் மனிதாபிமான முயற்சிகளைப் படம்பிடித்துக் காட்டிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ கட்டுரை இதயம் தொட்டது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; தேவா, கதிர்வேடு; கைவல்லியம், மானகிரி; நடராஜன், திருமுல்லைவாயில்; முருகேசன், கங்களாஞ்சேரி;  முத்துவேல், கருப்பூர்.

‘மாற்றுப்பாதை’, ‘ஒத்திகை’ என இரு கவிதை களும் அசத்தல்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்; முத்துவேல், கருப்பூர்; நவாப், திருச்சி; தேவதாஸ், பண்ணவயல்.

‘திரேசம்மா’ சிறுகதை மனதில் ஒற்றுமை உணர்வை மலரவைத்தது.
- கைவல்லியம், மானகிரி; முத்துவேல், கருப்பூர்.

தொன்மைப் பொருட்களை மெருகேற்றி பயன்படுத்தும் ஹேமா ருக்மணியின் கலையார்வம் அதிசயம்.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; பாக்கியவதி, மேக்காமண்டபம்.

வாடகை வீட்டில் வசித்தபடி சொந்த நிலத்தை ஏழைகளுக்கு தந்த பரந்த மனசுள்ள முகுடா சூர்யநாராயண், போற்றப்பட வேண்டியவர்.
- த.சிவக்குமார், திருச்சி; முத்துவேல், கருப்பூர்; பூதலிங்கம், நாகர்கோவில்.

கூட்டுக்குடும்ப அருமை பெருமைகளைச் சொல்லும் ‘கடைக்குட்டி சிங்கம்’ உண்மையில் பசுமை திரைப்படம் என்பதை ஹீரோயின்களைப் பார்த்தாலே  தெரிகிறது!
- மயிலைகோபி, அசோக்நகர்; சைமன்தேவா, விநாயகபுரம்; மனோகர், கோவை.