எக்சேஞ்ச் ஆஃபரில் செக்ஸ்!



வால்மார்ட்டோ அமேசானோ கூட இப்படி ஒரு ஆஃபரை அறிவிக்கவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த கணித ஆசிரியர் டீன் ஏஜ் பெண்ணை கனிய வைக்க ஐபோன் தருகிறேன் என்று கூறி சிக்கியுள்ளார். லாங் ஐலண்டைச் சேர்ந்த 70 வயது கணித ஆசிரியர் ஜெய்ரோ இன்ஸ்வாஸ்திதான் ரூட் போட்ட ரோமியோ. சென்ட்ரல் ஐஸ்லிப் பள்ளியில் பணியாற்றும் ஜெய்ரோ தன் வகுப்பறையிலுள்ள இரு மாணவிகளை அணுகி அவர்களின் நிர்வாணப் படங்களுக்கு பணமும், செக்ஸுக்கு ஒத்துழைத்தால் ஐபோனும் தருவதாக ஆசைகாட்டியுள்ளது என்கொயரியில் தெரிய வந்துள்ளது. மாணவி போலீசில் புகார் செய்ய, பள்ளி உடனே ஆசிரியர் ஜெய்ரோவை சஸ்பெண்ட் செய்துள்ளது. ‘‘மாணவிகளின் பிகினி போட்டோவுக்கு தலா 5 டாலர்களும், நிர்வாண போட்டோக்களுக்கு 150 டாலர்களும் அளிப்பதாக பேரம் பேசியுள்ளார்!’’ என பேட்டியளித்துள்ளார் காவல்துறை கமிஷனர் ஜெரால்டின் ஹார்ட்.

ஆடிட்டர் திருடர்!

ஆடிட்டராக நடித்து இந்தியாவிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களில் பணத்தை கொள்ளையடித்து வந்த அமேசிங் திருடர் மாட்டியுள்ளார். தில்லி கன்னாட் பிளேசிலுள்ள ஷோரூமில் ஆடிட்டராக நடித்த அமித்குமார், நடிப்பில் சொதப்ப, திருடிய 25 ஆயிரம் பணத்தோடு வகையாக சிக்கிக் கொண்டார். டிப்டாப் உடையில் பிராண்டட் ஷோரூமுக்கு சென்று பிரபல கம்பெனி ஆடிட்டராக அறிமுகமாகும் அமித், காஸ்ட்லி மெட்டீரியல்களை மட்டும் பார்வையிடுவார். முதலாளி கவனம் திசைமாறும்போது, நைசாக கேஷ் கவுண்டரிலுள்ள பணத்தை ஆட்டையைப் போடுவது அமித்தின் தொழில் சீக்ரெட்.

இந்நிலையில் கன்னாட்பிளேசில் சிசிடிவி கேமராவின் வழியே அமித் பணம் திருடுவதை கவனித்த கடை முதலாளி, துல்லியமாக அலாரத்தை அழுத்தி அமித்தை அலேக்காக அமுக்கி போலீசில் ஒப்படைத்துள்ளார். லாக்அப் விளாசலில் மும்பை, நொய்டா, ஃபரிதாபாத், ஜெய்ப்பூர், போபால் ஆகிய இடங்களிலும் ஆடிட்டர் முத்திரை பதித்து பல லட்சங்களை சுருட்டியுள்ளது தெரியவந்திருக்கிறது.

நிபா ஒழிப்புக்கு இசை வீடியோ!

‘‘ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை...’’ என்று  அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பெருமையுடன் பேட்டியளித்துள்ளார். நிபா நோயாளிகளுக்கென தனி வார்டு அமைத்து அவர்களைக் காப்பாற்றப் போராடிய மருத்துவர் அனூப் குமார், தளர்வறியாமல் சிகிச்சையளித்து நோய் தொற்றி இறந்த சஜீஸ் என்ற செவிலி ஆகியோர் நிபா ஒழிப்பு பணியில் மறக்கமுடியாத மனிதர்கள்.

இப்போது நிபா ஒழிப்பைக் கொண்டாடும் வகையில் ‘Bye nipah’ என்ற பெயரில் இசைவீடியோவை தன்னார்வலர்கள் சிலர் தயாரித்து வெளியிட்டுள்ளனர். கோழிக்கோட்டில் உருவான இந்த இசை வீடியோவில் நிபா ஒழிப்புக்கு பாடுபட்ட பேபி மெமோரியல் மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி நடித்துள்ளனர்.


தொகுப்பு: ரோனி