பேசும் டாய்லெட்!



ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி வரிசையில் ஸ்மார்ட் ஹோமை உருவாக்கும் நோக்கத்தில் களமிறங்கியிருக்கின்றன பெரு நிறுவனங்கள். அந்த வகையில் ஸ்மார்ட் ஹோமில் முக்கியப் பங்கு வகிக்கப்போவது டாய்லெட்தான்!
டாய்லெட்டை புதுவிதமாக எப்படி வடிவமைக்கலாம் என்ற யோசனையில் பல நிறுவனங்கள் முன்மாதிரி டாய்லெட்களைத் தயாரித்து கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த டெக் திருவிழாவில் காட்சிப்படுத்தின. அதில் அனைவரையும் கவர்ந்தது பேசும் டாய்லெட்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிளமிங் நிறுவனமான ‘கோலர்’தான் இந்த பேசும் டாய்லெட்டை உருவாக்கியுள்ளது. ‘தண்ணியைத் திறந்துவிடு’ என்று சொன்னாலே போதும், தானாகவே பைப்பில் இருந்து தண்ணீர் வெளியாகும். பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் நிறைந்தவுடன் அதுவாகவே நின்றுவிடும்.

பிறகு ‘உங்களுக்குப் பிடித்த பாடலை ப்ளே செய்யட்டுமா’ என்று அங்கிருக்கும் ரோபோ கேட்கும். இப்படி ஏராளமான வசதிகளைக் கொண்ட பேசும் டாய்லெட்டை ‘செயற்கை நுண்ணறிவு’ வசதியைக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

தொகுப்பு: த.சக்திவேல்