அஜித் கிரேட்! நெகிழும் ஷ்ரத்தா நாத்டபுள் ஹேப்பியில் ஜொலி ஜொலிக்கிறார் ஷ்ரத்தா நாத். ‘நேர்கொண்ட பார்வை’யில் பர்ஃபாமென்ஸில் செம ஸ்கோர் அள்ளிய பொண்ணு. பாலிவுட்டில் ‘மிலன் டாக்கீஸ்’, கன்னடத்தில் ‘யூடர்ன்’, தமிழில் ‘விக்ரம் வேதா’, தெலுங்கில் ‘ஜெர்சி’, மலையாளத்தில் ‘த வில்லன்’ என ஆல்வுட் ஏரியாவிலும் ரவுண்ட்கட்டி கலக்குகிறார்.

‘‘ஐ ஃபீல் கிரேட். நடிக்க வந்து நாலு வருஷங்களாச்சு. நிறைய போராட்டங்கள் இருக்கு. ஆனாலும் குறுகிய காலத்துலயே அஞ்சு மொழிகள்ல அதுவும் பேசப்படும் படங்கள் பண்ணிட்டேன்.சத்தியமா இதை சாதனைனு சொல்லல. ஏன்னா, இட்ஸ் எ டீம் ஒர்க். இயக்குநர்கள் உருவாக்கின கதைகள்ல நான் ஃபிட் ஆவேன்னு நினைச்சாங்க. அதை பூர்த்தி செய்திருக்கேன்னு நம்பறேன்.

குறிப்பா தமிழ்! இங்க நான் நடிச்ச படங்கள்ல இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ஹிட் அடிச்சிருக்கு. என் பெயர் தெரியாம கூட சிலர் இருக்கலாம். ஆனா, ‘யாஞ்சி யாஞ்சி’ ஸாங்கை பாடி, ‘நீங்க யாஞ்சி ஆக்ட்ரஸ்தானே’னு ஆர்வமா வந்து பேசுறாங்க; கைகொடுக்கறாங்க!

சென்னை, ஹைதராபாத், மும்பைனு எங்க பறந்தாலும் ரசிகர்களின் அன்பான வரவேற்பு இனிக்குது. இப்ப அஜித் சாரோடவும் நடிச்சாச்சு. நிஜமாவே வானத்துல பறக்கறேன்...’’ சந்தோஷ சிறகுகளை விரிக்கிறார்  ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

எப்படி இருந்துச்சு ‘நே.கொ.பா.’ அனுபவங்கள்..?
நைஸ். இதுக்கு முன்னாடி நிறைய படங்கள்ல நிறைய கேரக்டர்கள்ல நடிச்சிருந்தாலும் ‘நேர்கொண்ட பார்வை’யில் என்னைக் கேட்டதும், இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். நல்ல சப்ஜெக்ட், நல்ல மெசேஜ், பர்ஃபார்ம் பண்றதுக்கு அருமையான சான்ஸ். எல்லாத்துக்கும் மேல அஜித் சார்! அப்புறம் எப்படி அந்த சான்ஸை வேணாம்னு சொல்ல மனசு வரும்?

தமிழ்ல முதல்ல கமிட் ஆனப்பவே ‘நான் அஜித் சாரின் ரசிகை’னு எல்லா நேர்காணல்லயும் சொல்லியிருக்கேன். என் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை!

ஆஃபர் வந்த அடுத்த நாளே ஃபிளைட் பிடிச்சு சென்னை வந்துட்டேன். ஆடிஷன்ல எமோஷனலான ஒரு சீன்ல நடிக்க சொன்னாங்க. அப்புறம் காஸ்ட்யூம் டெஸ்ட் எடுத்தாங்க. அத்தனையிலும் டபுள் டிக் வாங்கினதால எளிதா இதுல வந்துட்டேன். ஷூட்ல மறக்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. கோர்ட் சீன்ல அபிராமி, ஆண்ட்ரியா கூட நிறைய காம்பினேஷன் இருக்கு. அதை எல்லாம் இப்ப ரசிகர்கள் படம் பார்த்துட்டு பாராட்டறாங்க!

டீசர்ல, ‘நீங்க வெர்ஜினா’னு என்னைப் பார்த்து அஜித் சார் கேட்கற டயலாக்குக்கு அவ்வளவு வரவேற்பு கிடைச்சது. இப்ப ரிலீசுக்குப் பிறகு அந்தப் பாராட்டுகள் டிரிபுள் ஆகியிருக்கு! ரொம்ப ஃபீல் பண்ணி நடிச்ச சீன் அது. க்ளிசரின் இல்லாமயே அழுதேன். இதைப் பார்த்து யூனிட்டே என்னை பாராட்டினாங்க! என்ன சொல்றார் அஜித்?

அஜித் கிரேட். சாரை பார்த்ததுமே ‘நான் உங்க ஃபேன்....’ அப்படி இப்படினு நிறைய பேசணும்னு ப்ளான் பண்ணிட்டே இருந்தேன். முதல் நாள் ஸ்பாட்டுல என் கார் நுழையறப்ப சாதாரண சேர்ல அஜித் சார் உட்கார்ந்திருப்பதை பார்த்து படபடப்பாகிட்டேன். வெரி த்ரில்லிங் மொமன்ட்.

அந்த செகண்ட்லயே மிஸ் வேர்ல்ட் பட்டம் கிடைச்ச சந்தோஷம்! பட், அவர் கூட நடிக்கறப்ப நர்வஸா ஃபீல் பண்ணவே இல்ல. இதுக்கு காரணம் அவர்தான். அவ்வளவு சிம்புளா பழகி எங்க எல்லாரையும் கன்ஃபர்ட்டபுளா நினைக்க வைச்சார்! இயக்குநர் வினோத் சாராலதான் இந்த படத்துக்குள்ள வந்தேன். அவருக்கு பெரிய தேங்க்ஸ்! ஸ்பாட்ல அவர் அதிகம் சிரிக்க மாட்டார். ஒர்க்ல அவரும் அவ்ளோ சின்ஸியரானவர்.

எப்போ தமிழ் கத்துக்கப் போறீங்க?

ஏன்... இப்பவே கொஞ்சம் கொஞ்சம் தமிழ்ல பேசறேனே! பொதுவா நடிகைகளுக்கு மொழி தடையா இருந்ததில்ல. பட், இதையே சாக்கா சொல்ல விரும்பலை. நிச்சயம் ஒருநாள் நானும் சரளமா தமிழ்ல பேசுவேன். ‘இந்தப் படத்துல நீங்கதான் டப்பிங்கும் பேசணும்’னு ஒரு சூழல் வர்றப்ப கண்டிப்பா அந்தப் படத்துக்காகவே தமிழை முறையா கத்துக்கிட்டு பேசுவேன். அந்த கான்ஃபிடன்ட் நிறையவே இருக்கு.

தமிழ்ல இப்ப ‘இரும்புத்திரை 2’ பண்ணிட்டிருக்கேன். மறுபடியும் மாதவன் சாரோட ஒரு படம் நடிக்கணும். விஷால் சாரோட மலையாளத்தில் ‘த வில்லன்’ல நடிச்சேன். மறுபடியும் அவரோடவும் நடிக்கணும்.

எல்லா இண்டஸ்ட்ரீயிலும் நடிச்சிருந்தாலும் எனக்கு முதன் முதல்ல ‘ஹார்ட்டி வெல்கம்’ கொடுத்தது மல்லுவுட்தான். இந்திரஜித் சுகுமார் நடிச்ச ‘கோஹினூர்’ படத்துல லீட் கேரக்டர் பண்ணினேன். முதல் படம்னால அது ரொம்பவும் ஸ்பெஷல் இல்லையா! ஸோ, மலையாளத்துல மறுபடியும் ரீ என்ட்ரிஆகி அங்கயும் நிறைய படங்கள் பண்ணணும்! டைம் இருக்கு பாஸ்!

மை.பாரதிராஜா

ரஞ்சித் கன்னா