பிரமம்
இந்தியில் பட்டையைக் கிளப்பிய ‘அந்தாதூன்’ படத்தை தெலுங்கு, மலையாளம், தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். கடந்த வாரம் தெலுங்கு ரீமேக்கான ‘மேஸ்ட்ரோ’ வெளியானது. இந்த வாரம் மலையாள ரீமேக்கான ‘பிரமம்’ வெளியாகி உள்ள்து.  இப்படத்தை ‘அமேசான் ப்ரைமி’ல் காணலாம். திறமையான பியானோ இசைக்கலைஞன் ரே மேத்யூஸ், இசையில் மட்டுமே கவனம் செலுத்த பார்வையற்றவன் போல் பாசாங்கு செய்கிறான். ஒரு ஹோட்டலில் பியானோ வாசிக்கும் வேலை அவனுக்குக் கிடைக்கிறது. ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்த உதய், அந்த ஹோட்டலின் முக்கிய வாடிக்கையாளர். ரேவின் இசையில் மனதைப் பறிகொடுத்த உதய், தன் வீட்டுக்கு ரே மேத்யூஸை அழைக்கிறார். அதை ஏற்று உதய்யின் வீட்டுக்கு ரே செல்கிறார். அங்கே உதய் கொலை செய்யப்பட்டு தரையில் கிடக்கிறார். தனது காதலனுடன் சேர்ந்து உதய்யைக் கொலை செய்தது அவரது
மனைவிதான். இந்தச் சம்பவம் ரே, உதய்யின் மனைவி, அவளுடைய காதலன் ஆகியோரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதே திரைக்கதை.
இசைக்கலைஞனாகப் பொருந்தியிருக்கிறார் ரேவாக நடித்த பிருத்விராஜ். தெரிந்த கதைதான் என்றாலும் அதை பிசகாமல் ரீமேக் செய்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாள ரான இயக்குநர் ரவி கே. சந்திரன்.
|