இந்த வார ராசி பலன்கள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

மேஷம்

சூரியன் பலமா இருக்காருங்க; அதனால தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வேலைகளை முடிப்பீங்க. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைங்க பொறுப்பா நடந்துப்பாங்க. தாய்வழி உறவுக்காரங்களால ஆதாயம் உண்டுங்க. அப்பப்ப வர்ற முன்கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக்கிட்டீங்கன்னா நல்லதுங்க. வாய்ப்புண், தலைவலின்னு வருமுங்க. வியாபாரத்துல பழைய சரக்குகளை விற்றிடுவீங்க. உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவார். முருகனை வழி படுங்க; முழுக்க முழுக்க நன்மைதான்.


ரிஷபம்
 
சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்கள்ல போறாருங்க. அதனால பணவரவு திருப்தி தருமுங்க. மூத்த சகோதரர் சமயத்துக்கு உதவுவாருங்க. யதார்த்தமா பேசி இழுபறி வேலைகளை முடிப்பீங்க. குடும்பத்துல அமைதித் தென்றல் வீசும். வீட்டைப் புதுப்பிப்பீங்க; அல்லது மாற்றுவீங்க. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீங்க. வியாபாரத்துல பாக்கிகள் வசூலாகிடும். உத்யோகத்துல நாள்பட்ட பணிகளை முடிப்பீங்க. வயிற்றுக்கோளாறு, மூட்டுவலின்னு அவதிப்படுவீங்க. துர்க்கையை வழிபடுங்க; துர்வினைகள் தூரப்போகும்.


 

மிதுனம்
 

 

    புதன் சாதகமான நட்சத்திரங்கள்ல போறாருங்க. அதனால புது நண்பர்கள் அறிமுகமாவாங்க. கணவன்&மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்குமுங்க. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளோட உடல்நலம் சீராகிடும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைச்சுக்கோங்க. கனவுத்தொல்லை, தூக்கமின்மை பிரச்னைகள் விலகிடுமுங்க. வியாபாரத்துல வளர்ச்சி காண்பீங்க. உத்யோகத்துல சக ஊழியர்கள் அனுசரணையா இருப்பாங்க. தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க; தடைகள் நீங்கும்.

 


கடகம்

சுக்கிரன் சாதகமான வீடுகள்ல போறாருங்க. அதனால வராதுன்னே நினைச்சிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்துல உங்க பேச்சுக்கு மதிப்பு கூடும். 15 முதல் 16ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடக்கறதால வீண் அலைச்சல், டென்ஷன் அதிகமாகும். அரசு விஷயங்கள்ல இருந்த தேக்கநிலை மாறுமுங்க. வியாபாரத்துல போட்டிகள் இருக்கும். உத்யோகத்துல மேலதிகாரியின் தொந்தரவு விலகிடும். ஒற்றைத் தலைவலி, வாயுக்கோளாறுன்னு வரும். ராகு கேதுவுக்கு சர்ப்ப ப்ரீதி பண்ணுங்க; தோஷங்கள் விலகும்.


சிம்மம்

சூரியன் பலமா இருக்காருங்க. அதனால குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத்துணையோட இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். சொந்தங்கள் தேடி வருவாங்க. 16ம் தேதி மாலை 6 மணி முதல் 18 வரை சந்திராஷ்டமம் நடக்கறதால காரியத்தடைகள், வீண் அலைச்சல்னு வரும். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்துல புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. உத்யோகத்துல திறமையை நிரூபிப்பீங்க. உடல்சூட்டால் வயிற்றுவலி, சருமத்துல கொப்புளம்னு வரும். ஆஞ்சநேயரை வழிபடுங்க; அச்சம் அகலும்.


 

கன்னி
 

 

செவ்வாய் சாதகமா இருக்காருங்க, அதனால பணப் பற்றாக்குறை இருக்காதுங்க. சொந்தங்கள் ஆதரவுக் கரம் நீட்டுவாங்க. கணவன்&மனைவி ஒருவரையொருவர் புரிஞ்சுக்காம சண்டை போடறதால சந்தோஷம் குறையுமுங்க. வெளிவட்டாரத்துல மதிப்பு கூடுமுங்க. 19 முதல் 21ம் தேதி மாலை 5 மணிவரை சந்திராஷ்டமம் நடக்கறதால அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. உத்யோகத்துல புது பொறுப்புகள் சேருமுங்க. அமிலச் சுரப்பால் குடலில் பிரச்னை வரும். புற்றுள்ள அம்மனை வழிபடுங்க; பெருகும் நன்மை.

 


துலாம்

குரு சாதகமா இருக்கறதால மனக்கவலை மறையுமுங்க. மனைவிவழி சொந்தங்களால ஆதாயம் உண்டுங்க. தாயாரோட உடல்நலம் தேறிடும், கவலைப்படாதீங்க. பயணங்களால நன்மை உண்டுங்க. பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுவீங்க. 21ம் தேதி மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் ஆரம்பிக்கறதால கவனமா இருங்க. வியாபாரத்துல பாக்கிகளை கனிவாகப் பேசித்தான் வசூலிக்கணும். உத்யோகத்துல யாரையும் புறஞ்சொல்லாதீங்க. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; தூக்கம் கெடும். விநாயகரை வணங்குங்க; விழமாட்டீங்க.

விருச்சிகம்

சூரியன் வலுவா இருக்காருங்க. அதனால எதிர்பார்த்த உதவி கிடைக்குமுங்க. குடும்பத்துல கலகலப்பு கூடும். அதிக வட்டிக் கடனை அடைக்க வழி தெரியுமுங்க. பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மனக்குழப்பங்கள் நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராவதால மருத்துவச் செலவுகள் குறையுமுங்க. வியாபாரத்துல விலகிப்போன வாடிக்கையாளர்கள் வருவாங்க. உத்யோகத்துல சுறுசுறுப்பாக இயங்குவீங்க. காய்ச்சல், சளித்தொந்தரவுன்னு வருமுங்க. இஷ்டப்பட்ட மகானை வணங்குங்க; கஷ்டங்கள் கரையும்.


தனுசு

குரு வலுவா இருக்காருங்க; அதனால ரொம்ப நாளா இழுத்தடிச்ச வேலை ஒண்ணு இப்ப முடியும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்திடுங்க. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்குமுங்க. மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். நெஞ்சுச்சளி, தொண்டைப் புகைச்சல்னு வரும். தாய்வழி உறவினர்கள் உதவியால சில வேலைகளை முடிப்பீங்க. வியாபாரத்துல புது முதலீடு பத்தி யோசிப்பீங்க. உத்யோகத்துல சுறுசுறுப்பா இருப்பீங்க. குலதெய்வத்தை வணங்குங்க; குறையில்லாம வாழ்வீங்க.


மகரம்

புதன் சாதகமா அமர்ந்திருக்காருங்க. அதனால எதிர்பார்த்த உதவிகள் கிடைக்குமுங்க. குடும்பத்துல அமைதி நிலைக்கும். பிள்ளைகள் உடல்நலம் சீராகிடும். பிரபலங்களைச் சந்திப்பீங்க. கணவன் மனைவிக்குள் நெருக்கம் பிறக்கும். மூத்த சகோதரர் உதவுவார். கோயில் திருப்பணிகள்ல கலந்துப்பீங்க. தாய்வழி உறவுகள் ஆதரவு தருவாங்க. வீட்டை விரிவுபடுத்துவீங்க. ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல்னு வருமுங்க. வியாபாரத்துல புது முதலீடு செய்வீங்க. உத்யோகத்துல ஆதாயங்கள் அதிகரிக்கும். பெருமாளை வணங்குங்க; பிரகாசமா வாழ்வீங்க.


 

கும்பம்
 

 

சுக்கிரன் வலுவா இருக்காருங்க. அதனால போன வாரம் முடியாத வேலைகள் இப்ப முடியும். குடும்பத்துல சுபவிசேஷங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளால பெருமையடைவீங்க. கூடப்பிறந்தவங்க ஒத்துழைப்பாங்க. தொடர்பு விட்டுப்போன பழைய சொந்தங்கள் தேடி வருவாங்க. முன்கோபத்தைக் குறைக்கணுமுங்க. சளித்தொந்தரவு, சிறுநீர் தொற்றுன்னு உபாதை வருமுங்க. வியாபாரத்துல புது அணுகுமுறையால போட்டிகளை சமாளிப்பீங்க. உத்யோகத்துல வீண் டென்ஷன் குறையும். சிவனுக்குப் பன்னீர் அபிஷேகம் பண்ணுங்க; வாழ்க்கை மணக்கும்.

 


மீனம்

செவ்வாய் சாதகமான நட்சத்திரத்துல போறாருங்க. அதனால பழைய பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீங்க. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவாங்க. குடும்பத்துல கலகலப்பான சூழல் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால மகிழ்ச்சி உண்டுங்க. கழுத்துவலி, வாயுக்கோளாறுன்னு வருமுங்க. வியாபாரத்துல சில சலுகைகளை அறிவிச்சு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீங்க. உத்யோகத்துல உங்க யோசனையை மேலதிகாரி ஏற்பார். இஷ்டப்பட்ட அம்பாளை வழிபடுங்க; ஆனந்தம் நிலைத்திடும்.