டைல்ஸ் டெகரேஷனில் தைரியமா இறங்குங்க!



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

                        இன்று டைல்ஸ் பதிக்காத வீடுகளைப் பார்ப்பது அரிது. வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என ஒவ்வொரு அறைக்கும் பார்த்துப் பார்த்து டைல்ஸ் பதிக்கிறோம்.

குட்டீஸ் அறையில் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் பதித்த டைல்ஸ், சமையலறையில் பழங்கள், காய்கறிகள் பதித்த டைல்ஸ், குளியலறையில் மீன், கடல் உருவங்கள் பதித்த டைல்ஸ் என இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவோரும் உண்டு. ‘‘இப்படி பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட டைல்ஸ்களை நீங்களே உங்கள் கற்பனைக்கேற்றபடி செய்யலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி. வீட்டை அழகுபடுத்த மட்டுமின்றி, அன்பளிப்புப் பொருளாகக் கொடுக்கவும் டைல்ஸ் டெகரேஷன் சரியான சாய்ஸ் என்கிறார் அவர்.

‘‘பத்து வருஷமா கை வினைப் பொருள்கள் பண்ணிட்டிருக்கேன். 50க்கும் அதிக பொருள்கள் செய்யத் தெரியும். அதுல டைல்ஸ் பெயின்ட்டிங்கும் ஒன்று. முதல்ல எங்க வீட்டை அலங்கரிக்க செய்து வச்சேன். வீட்டுக்கு வர்றவங்க பார்த்துட்டு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. வெளில டைல்ஸ் கடைல ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கினா, செலவு எக்கச்சக்கம். நாமளே பண்ணினா, பணமும் மிச்சம்; தேவையான டிசைனையும் பண்ணலாம்’’ என்கிற மகாலட்சுமி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘விருப்பமான கலர் மற்றும் அளவுகள்ல டைல்ஸ், க்ளே, ஃபேப்ரிக் கலர், பிரஷ், அலங்கரிப்புப் பொருள்கள்... ஒரு டைலோட விலை 20 ரூபாய். மற்ற பொருள்களுக்கு 80 ரூபாய். அவ்வளவுதான்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘பூஜை ரூமுக்கு சாமி படம், குட்டீஸுக்கு கார்ட்டூன், கிச்சனுக்கு சமையல் பொருள்கள்னு விருப்பமான டிசைன்களை பண்ணலாம். ஸ்டெயின்டு கிளாஸ் மாடல், மியூரல் மாடல், எம்போஸ்டு மாடல்னு நிறைய இருக்கு. அப்படியே டிசைன் பண்ணி, வார்னிஷ் கொடுத்து, அதுக்கு மேல ஃபிரேம் பண்ணி, அன்பளிப்பாவும் கொடுக்கலாம்.’’

பிசினஸ் வாய்ப்பு? லாபம்?
‘‘வீடுகளுக்கு பதிக்க எல்லாரும் வாங்குவார்கள். அன்பளிப்புப் பொருள்கள் விற்கற கடைகள் லயும், வீட்டு அலங்காரப் பொருள் கள் விற்கற கடைகள் லயும் கொடுக்கலாம். 150 ரூபாய்லேருந்து 500, 600 ரூபாய் வரை டிசைனைப் பொறுத்து விலை வைக்கலாம். ஒரு நாளைக்கு 5 டைல்ஸ் வரைக்கும் டிசைன் பண்ணலாம்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோடு சேர்த்துக் கட்டணம் 300 ரூபாய்.’’
 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்