நியூஸ் வே



*நூறு ரூபாய் உதவி செய்து விட்டு அதை ஐந்நூறு பேருக்கு சொல்லிவிடும் திரையுலகத்தினர் மத்தியில், ஹன்சிகா 50 பிள்ளைகளுக்கு மேல் தத்து எடுத்து, அவர்களுக்கு முழுச் செலவும் செய்கிறார். மாதம் இருமுறை அவர்களைப் போய்ப் பார்க்கிறார். இப்போது கோடை விடுமுறைக்கு எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அவுட்டிங் போகிறார்!

*ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய ‘காளி’ ஞாபகம் இருக்கலாம். அதையே தலைப்பாக வைத்து கார்த்தி நடித்து வந்தார். ‘அட்டகத்தி’க்குப் பிறகு ரஞ்சித் களம் இறங்கிய படம். இப்போது என்ன நினைத்தார் களோ தெரியவில்லை... படத்திற்கு ‘மெட்ராஸ்’ என தலைப்பை மாற்றி விட்டார்கள். க்ரைமா, வாழ்க்கையா எதை கையில் எடுக்கிறது அதுதான் கதையாம். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

சும்மா ஒரு வார்த்தைக்குத்தான் ‘‘நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்’’ என சொல்லி வைக்கிறார் அமலாபால். ஆனால், திரும்பவும் நடிப்பதில் இயக்குனர் விஜய்யின் அப்பா-அம்மாவிற்கு பிடித்தமில்லை. மகனின் படங்களில் மட்டும் நடிக்கலாம் என்பது வருங்கால மாமியாரின் விருப்பம்.

‘நாகராஜன் சோழன்’ படத்தில் அறிமுகமான மிருதுளா முரளிக்கு பூர்வீகம் எர்ணாகுளம் என்றாலும் படித்ததெல்லாம் சென்னையில்தான். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் ஆசையில் லேட்டஸ்டாக போட்டோ ஷூட் செய்து ஹீரோக்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

*பார்த்திபன், கமலுக்கு அடுத்து உடல் தானம் செய்த கோலிவுட் நட்சத்திரம் ஆகியிருக்கிறார் நடிகை சோனா. உடல் தானத்தை பிரபலப்படுத்தவே தன் பிறந்த நாளில் இந்த முடிவைச் செய்தாராம். வெல்டன் சோனா! உங்க சுய
சரிதை புத்தகம் எப்ப வருது?

*அடுத்த படத்திற்கு இன்னும் திட்டமிடுகிறார் வடிவேல். ஏற்கனவே படம் இயக்கிய யுவராஜுக்கு ஒரு படம் செய்ய ஒப்புதல் கொடுத்துவிட்டார். அடுத்து சொந்தப்படம் தயாரிக்கலாமா என்ற தீவிர யோசனையில் இருக்கிறார். ‘‘வேண்டாம், விபரீதம்’’ என நண்பர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

*ஆண்ட்ரியா அலைபேசியில் பேசும்போது ஒரு வித்தியாசம் காட்டுவார். பேசுகிறவர்கள் அறிந்தவர் தெரிந்தவராக இருந்தால், பேசி முடிந்ததும் அவர் பாடிய ‘ஹிட்’ பாடல் ஒன்றின் முதல் இரண்டு வரியை ஸ்ருதி சுத்தமாகப் பாடி முடிப்பார். போனை வைக்கும்போது சாந்தமாக வைக்கலாம். அடடா... நல்லாயிருக்கே!

*கொஞ்சம் கொஞ்சமாக தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகிறார் தனுஷ். தன் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் சிவகார்த்திகேயனை விட்டு விட்டு, விஜய்சேதுபதியை வைத்து படம் செய்யக் கேட்டிருக்கிறார். விஜய்சேதுபதியும் நடப்பில் இருக்கிற படங்களை முடித்துவிட்டு செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டார். அடுத்ததாக, இந்தியில் அமிதாப் நடித்த ‘சர்க்கார்’ படத்தை தமிழில் ரஜினி நடித்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் தனுஷின் பெரிய ஆசை.

*கொஞ்சம் கொஞ்சமாக தன் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகிறார் தனுஷ். தன் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் சிவகார்த்திகேயனை விட்டு விட்டு, விஜய்சேதுபதியை வைத்து படம் செய்யக் கேட்டிருக்கிறார். விஜய்சேதுபதியும் நடப்பில் இருக்கிற படங்களை முடித்துவிட்டு செய்வதாக ஒப்புக் கொண்டுவிட்டார். அடுத்ததாக, இந்தியில் அமிதாப் நடித்த ‘சர்க்கார்’ படத்தை தமிழில் ரஜினி நடித்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் தனுஷின் பெரிய ஆசை.

*வெகுநாட்களுக்குப் பிறகு ரஜினி மகள் சௌந்தர்யாவும் கமலும் கௌதமியும் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசினார்கள். ‘கோச்சடையான்’ படம் பார்த்த பிறகு நடந்த சந்திப்பு இது. ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக தூர இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள். மகள் மாதிரியான கரிசனத்துடன் சௌந்தர்யா பேசுவதைக் காது கொடுத்து கேட்டுக் கொண்டே இருந்தார் கமல்.

*தனது பி ஸ்டூடியோ சார்பில் வரிசையாக படம் தயாரிக்கும் வேலையில் தீவிரம் காட்டியுள்ளார் பாலா. அதர்வா நடிக்கும் ஒரு படத்துக்கு விரைவில் பூஜை போடப் போகிறார். இதில் அதர்வா ஜோடியாக துளசி நடிக்கலாம் என்கிறார்கள்.

*கொஞ்ச நாட்களாக ஜீவாவிற்கும் சிம்புவிற்கும் ‘‘ஹலோ’’ தவிர எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தவர்கள், அரை மணி நேரம் உட்கார்ந்து பேசி சரியாகி விட்டார்கள். இத்தனைக்கும் இரண்டு பேரும் ஒரே தெருக்காரர்களாக இருந்து, இப்போதுதான் அடுத்த தெருவிற்கு மாறினார் சிம்பு.

*நடிகர் நாசரின் மகன் பைசல் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தபோது, கூடவே இருந்து கவனித்துக் கொண்டார் டைரக்டர் விஜய். இத்தனைக்கும் அவருக்கு கல்யாணப் பத்திரிகை தரவேண்டிய அவசியம் இருந்தது. அதுமாதிரி கவனித்தவர் நடிகர் சித்தார்த். ‘காவியத் தலைவன்’ படத்தில் நாசரோடு சேர்ந்து நடித்தது அவர்களின் நட்பை விசாலமாக்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் பைசல்.

*அஜித் படத்தில் வில்லி வேடத்துக்குத் தயாராகிவிட்ட த்ரிஷா, இந்த கால்ஷீட் முடிந்த கையோடு தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் படத்துக்கு தேதிகளை ஒதுக்கியுள்ளாராம்.