தத்துவம் மச்சி தத்துவம்



நம்ம மேல முள் பட்டா, முள்ளைத் தூக்கிப் போட்டுடலாம்; நம்ம மேல கண் பட்டா, கண்ணைத் தூக்கிப் போட்டுட முடியுமா?
- கண் திருஷ்டிக்கு பயந்து தலைமறைவானோர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

தேர்வில் ‘கன் மார்க்’ எடுத்தால் டென்மார்க்கில்கூட வேலை கிடைக்கும்; ‘டென் மார்க்’ எடுத்தால் டாஸ்மாக் பாரில்கூட வேலை கிடைக்காது!
- ஃபெயில் மார்க் எடுத்து டாஸ்மாக் பெஞ்சில்
புலம்புவோர் சங்கம் 
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.

‘‘உங்க மனைவியை
கை நீட்டி அடிப்பீங்களா..?’’
‘‘நான் கை நீட்டுறதோட சரி... அடிக்கறது
எல்லாம் அவதான்!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘பெண் பார்க்க வந்த டாக்டர் மாப்பிள்ளை என்ன சொன்னார்..?’’
‘‘24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் உறுதியா சொல்ல முடியுமாம்..!’’
- எஸ்.மோகன், கோவில்பட்டி.

‘‘யார் வந்தாலும், நான் வேட்டையில் பிஸியாக இருக்கிறேன் என சொல்லிவிடுங்கள் அமைச்சரே!’’
‘‘மன்னா! தாங்கள் ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ விளையாடுவதை ‘பறவை வேட்டை’ என்று சொல்வது அநியாயப் பொய்...’’
- வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

‘‘என் கையைப் பார்த்ததுமே, எனக்கு ஏராளமா கடன் இருக்குன்னு எப்படி கரெக்டா சொல்றீங்க
ஜோசியரே?’’
‘‘எனக்கே நூறு ரூபா பாக்கி இருக்கேய்யா!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘தலைவர் ஏன் வருத்தத்துல இருக்காரு..?’’
‘‘கட்சியில ‘செல்வாக்கு இல்லாதோர் அணி’ன்னு புதுசா தொடங்கி, அதுக்கு இவரை
தலைவரா போட்டுட்டாங்களாம்!’’
- வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.