சகுனியின் தாயம்



‘‘ஆம். முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டினால் உருவான பல்லக்கில் ஏறித்தான் யவன ராணி தப்பித்திருக்கிறாள்...’’ - அழுத்தம் திருத்தமாக சொன்ன
சீன சக்கரவர்த்தி தன் முன்னால் திகைப்புடன் நின்றிருந்த தமிழகத்தின் இரு மன்னர்களையும் மாறி மாறி பார்த்தார். ‘‘இதை என்னால் நிரூபிக்கவும் முடியும்...’’
‘‘எப்படி?’’ - அதிர்ச்சியுடன் கேட்டார் சோழ மன்னர் பெருநற்கிள்ளி.

‘‘சொன்னால் போதுமா, அல்லது ருசுவும் வேண்டுமா?’’
சீன சக்கரவர்த்தியின் இந்தக் கேள்வி இரு முடிவேந்தர்களையும் அசைத்தது.
‘‘இரண்டும்...’’ - பற்களை கடித்தார் பெருநற்கிள்ளி. 
‘‘அப்படியானால் வாருங்கள்...’’

‘‘எங்கு?’’ சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை படபடத்தார்.‘‘புகார் தளபதியின் மாளிகைக்கு...’’
அதன் பிறகு மூவரும் தாமதிக்கவில்லை. தத்தம் புரவியில் ஏறி தளபதியின் மாளிகையை நோக்கி விரைந்தார்கள்.
அங்கு நிலவிய சூழல் சீன சக்கரவர்த்தியை தவிர மற்ற இருவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மாளிகையை அடைந்ததுமே ஏதோ விபரீதம் நடந்திருப்பதை பெருநற்கிள்ளி புரிந்து கொண்டார். அதற்கு ஏற்பவே காவலர்களின் நடமாட்டம் தடுமாற்றத்துடன் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக இங்கும் அங்கும் ஓடினார்கள். இடித்துக் கொண்டார்கள். எரிந்து விழுந்தார்கள். அனைவரது கண்களிலும் பூத்திருந்த அச்சம், எதிர்பாராத சம்பவம் அரங்கேறியிருப்பதை உணர்த்தியது. உப்பரிகையிலிருந்து எழுந்த கூச்சலை உள்வாங்கியபடியே மாளிகைக்குள் விரைந்தார்.

‘‘காவலர் தலைவன் எங்கே?’’
சோழ மன்னர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் எதிர்ப்பட்ட காவலன் திருதிருவென விழித்தான்.
‘‘உன்னைத்தான். மன்னர் கேட்கும் கேள்வி காதில் விழவில்லையா?’’ சேர மன்னர் இரைந்தார்.
‘‘வந்து... வந்து... மேலே... இ...ரு...க்கிறார்...’’

‘‘அழைத்து வா...’’
‘‘உத்தரவு...’’ விழுந்தடித்துக் கொண்டு அந்தக் காவலன் ஓடினான்.
‘ஒருவேளை சீன சக்கரவர்த்தி காண்பிப்பதாக சொன்னது இந்த அசாதாரணமான சூழலையா..? என்ன நடந்தது; அல்லது நடக்கிறது..?’கணத்தில் பூத்த கேள்விகளுடன் சோழ மன்னர், தன்னருகில் வந்து நின்றவரை ஏறிட்டார். கண்கள் இடுங்க தன் தாடையைத் தடவியபடி சீன சக்கரவர்த்தி அசையாமல் நின்றாரே தவிர, வேறெதுவும் சொல்லவுமில்லை. திரும்பி மற்றவர்களை பார்க்கவுமில்லை. சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் முகம் அவர் பெயருக்கு தகுந்தபடி இரும்பாக மாறியிருந்தது. அதை வைத்து அவர் மனதில் ஓடுவதை கணிக்க முடியவில்லை.

மொத்தத்தில் இரு தேச அரசர்களின் முன்னால், தான் கையறு நிலையில் நிற்கிறோம் என்பது மட்டும் பெருநற்கிள்ளிக்கு தெளிவாகப் புரிந்தது. அதுவே மூண்ட கோபத்தை கொழுந்துவிட்டு எரியவும் செய்தது. விரைந்து வந்த காவலர் தலைவனிடம் அதை அப்படியே காட்டினார்.
‘‘என்ன நடக்கிறது இங்கே?’’

‘‘ஒ..ன்..று..மில்லை மன்னா. விரைவில் பிடித்துவிடுவோம்...’’
‘‘யாரை?’’பதில் சொல்ல முடியாமல் உமிழ்நீரை விழுங்கினான்.
‘‘உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன்...’’ அவனை பார்வையால் எரித்தபடியே பெருநற்கிள்ளி கர்ஜித்தார்.
‘‘வந்து... வந்து...’’

‘‘யார் வந்தது? யார் சென்றது?’’
‘‘தெரியவில்லை மன்னா... அதைத்தான் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்...’’
‘‘ஏதேனும் பானத்தை அருந்தியிருக்கிறாயா? எதற்காக இப்படி உளறுகிறாய்?’’
‘‘அவன் உளறவில்லை...’’ நிதானத்தை கலைத்தார் சீன சக்கரவர்த்தி.
‘‘என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘நிரூபணத்தை...’’ சோழ மன்னருடன் தன் பார்வையைக் கலந்த சீன சக்கரவர்த்தி, காவலர் தலைவன் பக்கம் திரும்பினார். ‘‘கொலையுண்ட யவன அரசரின் சடலத்தை காணவில்லையா?’’
சட்டென்று அங்கே அமைதி நிலவியது. காவலர்கள் அனைவரும் சிலையைப் போல் ஆங்காங்கே அப்படியே அசையாமல் நின்றனர். யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் கண்கள் விரிந்தன. காவலர் தலைவன் எதுவும் பேசாமல் தலை குனிந்தான். பெருநற்கிள்ளி ஓரடி எடுத்து வைத்து அவனை நெருங்கினார்.
‘‘சீன சக்கரவர்த்தி சொல்வது உண்மையா?’’

உதட்டை கடித்தபடி ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான்.சீற்றம் தலைக்கு ஏற, ஏதோ சொல்ல சோழ மன்னர் முயன்றார். அவர் கரங்களைப் பிடித்துத் தடுத்த சீன சக்கரவர்த்தி, நாலாபுறமும் தன் கண்களை சுழற்றினார்.‘‘இறுதியாக ஒரு கேள்வி...’’ என்றபடி தொண்டையைக் கணைத்தார். ‘‘அந்த சோழப் பணிப்பெண் எங்கே?’’
‘‘யாரைக் கேட்கிறீர்கள்?’’ பெருநற்கிள்ளியின் கேள்வியில் சந்தேகத்தின் சாயல் பரிபூரணமாகத் தென்பட்டது.

‘‘அதுதான்... இளமாறனைக் கைது செய்ய யவன ராணியைப் போன்ற தோற்றமுடைய ஒரு பெண்ணை பயன்படுத்தினீர்களே... அவளைத்தான் கேட்கிறேன்...’’
‘‘மறைந்திருப்பாள்... அப்படித்தானே?’’ கேட்ட சோழ மன்னர் காவலர் தலைவனை ஊடுருவினார்.தன் காலடியில் பூமி பிளக்காதா... அதனுள், தான் மறைய மாட்டோமா... என்பதுபோல் காவலர் தலைவன் கூனிக் குறுகினான்.‘‘சரி... மறைந்த சேடிப் பெண்ணையும், யவன அரசரையும் கண்டுபிடிப்பதற்கான செயலில் இறங்கு...’’ என்று அவனை அனுப்பிவிட்டு சீன சக்கரவர்த்தியை நேருக்கு நேர் பார்த்தார் பெருநற்கிள்ளி.‘‘புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்கூடாகக் காட்டிவிட்டீர்கள். நல்லது. இனி சொல்ல வேண்டியதையும் சொல்லி விடுங்கள்...’’
‘‘ஏற்கனவே சொன்னது தான்...’’

புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டார்.‘‘பாண்டியர்களுக்கும், யவனர்களுக்கும் தேவைப்படும் ஏதோ ஒரு பொருள் சோழ நாட்டில் இருக்கிறது. அதைக் கைப்பற்றாமல் பாண்டிய இளவலோ, இளமாறனோ, யவன ராணியோ இங்கிருந்து அகல மாட்டார்கள். திரும்பத் திரும்ப புகாரில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள். எனவே...’’
‘‘எனவே?’’

‘‘அந்தப் பொருளை அவர்களுக்கு முன் நாம் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த யுத்தம் தொடங்கும்...’’‘‘ம்...’’‘‘எந்தப் பொருளை அபகரிக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தெரியுமா?’’‘‘ஓரளவு என்னால் சொல்ல முடியும்...’’ சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இடையில் புகுந்தார்.
மற்ற இருவரும் அவர் பக்கம் திரும்பினார்கள்.இளமாறனும், யவன ராணியும் எந்தப் பொருளை கைப்பற்ற முயல்கிறார்கள் என்று சேர மன்னர் விவரிக்க... விவரிக்க... சோழ மன்னரும், சீன சக்கரவர்த்தியும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

‘‘வாங்க பாட்டி... உங்களைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்...’’ புன்னகையுடன் வரவேற்றாள் தேவதை.‘‘சீ... என்னை பாட்டினு கூப்பிடாதே...’’ சூனியக்கார பாட்டி சீறினாள். ‘‘என்ன தைரியம் இருந்தா எனக்கு எதிரானவங்க கூட கூட்டு சேருவே...’’‘‘நல்ல காரியத்துக்காக நல்லவங்களோட சேர்றதுல தப்பில்லையே பாட்டி...’’‘‘ஏய்...’’‘‘கத்தாதீங்க பாட்டி. நீங்க தப்பான வழில போறீங்க. அதனாலதான் உங்க சொந்த பேத்தியாவே இருந்தாலும் உங்களுக்கு எதிரா நான் இருக்கேன்...’’

‘‘சாப விமோசனம் கிடைச்ச தெனாவெட்டுல பேசறியா?’’
‘‘இல்ல பாட்டி. தீயவங்களை அழிக்க மகேஷ் வந்துட்டாங்கிற தெம்புல பேசறேன்...’’
‘‘கிழிச்சான். உன்னை ஆடா மாத்தினா மாதிரி அவனை முதலையா மாத்த எனக்கு ஒரு செகண்ட் போதும்...’’
‘‘முடிஞ்சா அதைச் செய்து பாருங்க...’’ தேவதை சிரித்தாள்.

‘‘என்ன, சவால் விடறியா?’’‘‘இல்லை பாட்டி. நிஜத்தை சொல்றேன். இப்ப அவன் முன்ன மாதிரி சின்னப் பையன் இல்லை. சர்வ சக்தி படைச்சவன். அவனுக்கு விக்கிரமாதித்த மகாராஜாவோட பூரண ஆசி கிடைச்சிருக்கு. சொல்லப் போனா அவனே விக்கிரமாதித்த மகாராஜாதான்...’’‘‘போடி ஃபூல். இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு... அந்த மகேஷ் எரிஞ்சு சாம்பலாகப் போறான்...’’
இதைக் கேட்டு தேவதை அதிர்ந்தாள். நம்ப முடியாமல் சூனியக்காரப் பாட்டியை பார்த்தாள்.

‘‘புரியலையா? உனக்கு மட்டுமில்ல... ஸ்பைடர் மேனுக்கும், ஹாரி பார்ட்டருக்கும் கூட சாப விமோசனம் கொடுத்திருக்கான். அது மட்டுமா? அவங்களையும் தன் கூடவே கூட்டிட்டு போறான். அவங்க ரெண்டு பேரும் யாரு? என்னோட ஆளுங்க. அவங்க குடுமி என் கைல இருக்கு. அதனால எனக்குத்தான் விசுவாசமா இருப்பாங்க. இனி என்ன நடக்கப் போகுதுன்னு நீயே பாரு...’’
அலட்சியமாக சொல்லி விட்டு தனது புல்லட்டில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தாள். சடசடவென்று அந்த வாகனம் நெருப்பை கக்க ஆரம்பித்தது.

‘‘மை டியர் கிராண்ட் டாட்டர்...’’ சொடுக்குப் போட்டு தேவதையை அழைத்தாள். ‘‘இங்க வந்தது சும்மா உன்னை பார்த்துட்டு போகன்னு நினைச்சியா..? முட்டாள்...’’ என்றபடி தன் இடது உள்ளங்கையை உயர்த்தினாள். அதிலிருந்து புறப்பட்ட இரும்புக் கம்பிகள் ஒளியை விட வேகமாக பாய்ந்து தேவதையை சுற்றி மூடியது.

‘‘அடுத்த முறை மகேஷ் மோதிரத்தை தேய்ச்சான்னா உன்னால அவன் முன்னாடி போய் நிற்க முடியாது. ஏன்னா இப்ப நீ சிறைல இருக்க. அதுவும் மின்சார ஜெயில். என்ன பார்க்கிற..? இந்த இரும்பு கம்பிகளுக்கு நடுவுல மின்சாரம் பாயுதுடி என் அருமை பேத்தியே...’’ இடி போல் சிரித்துவிட்டு தன் புல்லட்டில் பறந்தாள்.செய்வதறியாமல் திகைத்த தேவதையின் உள்ளத்தில் மகேஷ் இனி என்ன செய்யப் போகிறான் என்ற கேள்விதான் விஸ்வரூபம் எடுத்தது.

இதே வினாதான் மந்திரவாதி தாத்தாவின் மனதிலும் எழுந்தது. எனவே மாயக் கண்ணாடியின் வழியே, அந்த சிறுவன் என்ன செய்கிறான் என்று பார்த்தார்.
அங்கே தென்பட்ட காட்சி தாடியாக அவர் தாடையில் வளர்ந்திருந்த விழுதுகளை அசைய வைத்தது.

கொந்தளிக்கும் கடல் மீது தரையில் நடப்பது போல் சர்வசாதாரணமாக மகேஷ் நடந்து கொண்டிருந்தான். அவனது இரு தோள்களிலும் ஸ்பைடர் மேனும் ஹாரி பார்ட்டரும் அமர்ந்திருந்தார்கள்.
‘கடல் மேல நடக்கிற அளவுக்கு உனக்கு பவர் வந்துடுச்சா...’ முணுமுணுத்த மந்திரவாதி தாத்தா தன் புருவத்தில் இருந்த ஒரு முடியை கிள்ளி காற்றில் ஊதினார்.
அடுத்த நொடி, மகேஷின் வலது கை ஆள்காட்டி விரலில் இருந்த மோதிரம் ‘பளிச்... பளிச்’ என்று ஒளிர்ந்தது.அந்த ரிங்தான் -தேவதையை அழைக்கும் மோதிரம்!

அது ஏன் ஒளிர்கிறது என்று தெரியாமல் தன்னையும் மறந்து அதை மகேஷ் தேய்க்க ஆரம்பித்தான்...அந்தக் கறுப்பு ஆடு எதுவென்று இன்று வரை தெரியவில்லை...சகுனி தன் கண்களை இறுக மூடினார். செய்தியை அறிந்து பீஷ்மர் கொந்தளித்ததும், காந்தார அரச வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் உடுத்திய ஆடைகளுடன் கைது செய்யப்பட்டு அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வரப்பட்டதும் காட்சிகளாக விரிந்தன.

காந்தாரியை சந்திக்கும் வாய்ப்பு அவர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை. இரவோடு இரவாக அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கு தான் தன் தீர்ப்பையே பீஷ்மர் வழங்கினார்.
அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் இப்போதும் சகுனியின் உள்ளத்தை அறுத்தது.‘‘காந்தாரி பதிவிரதை. தெய்வத்துக்கே தெய்வமாகும் தகுதி அவளுக்கு உண்டு. அதற்காக உங்களை மன்னிப்பேன் என்று நினைக்காதீர்கள். சுபாலனே... நீ செய்தது பெரும் பிழை.

 தக்க சமயத்தில் ஜோதிடர் மட்டும் உண்மையைக் கண்டறியாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? நினைத்தாலே உடல் நடுங்குகிறது. எங்கள் குலக்கொழுந்தான திருதராஷ்டிரன் அல்லவா இறந்திருப்பான்? அப்படி மட்டும் நடந்திருந்தால்... தெய்வமே... என் சிற்றன்னைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறும் நிலைக்கு ஆளாகியிருப்பேன். எந்த சிம்மாசனத்தில் நான் அமர மாட்டேன் என்று உறுதியளித்தேனோ அதே சிம்மாசனத்தில் அமர்ந்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பேன்.

அதன் மூலம் பஞ்சமா பாதகமும் என்னை வந்து அடைந்திருக்கும். இவை எல்லாம் நடக்கவில்லை என்பதாலேயே நீ செய்தது சரி என்றாகிவிடாது. நியாயமாகப் பார்த்தால் உண்மையை என்னிடம் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நீயாக முடிவெடுத்தது தவறு. அஸ்தினாபுர மகாராணியாக உன் மகள் வீற்றிருக்க வேண்டும் என்பதற்காக சுயநலத்துடன் செயல்பட்டிருக்கிறாய். மகாராணியின் தந்தை என்ற அந்தஸ்துடன் நீ வலம் வர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் மறைத்திருக்கிறாய்... இதற்கான தண்டனையை நீயும், உன்னைச் சேர்ந்தவர்களும் அனுபவித்தே ஆக வேண்டும். இனி காலம் முழுக்க நீங்கள் அனைவரும் சிறையில்தான் வாட வேண்டும். உங்களைக் கொன்றால் அந்தப் பாவம் என்னை வந்து சேரும். எனவே நானாக உங்களை கொல்ல மாட்டேன். அதே நேரம் நீங்களாக மரணமடையும்படி செய்வேன். யாரங்கே...’’

சிறைக் காவலன் ஓடி வந்தான்.‘‘இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தினமும் ஒரு கவளம் உணவு கொடு போதும்...’’ கட்டளையிட்டு விட்டு நகர்ந்தார்.
அந்த ஒரு கவளம் உணவுதான் சகுனியின் கால்களையும் உடைத்தது. தாயம் உருவாகவும் காரணமாக அமைந்தது.
அந்த தாயம்தான் கௌரவர்களையும், பாண்டவர்களையும் அழிக்கவும் போகிறது...
மெல்ல தன் கையில் இருந்த தாயத்தை உருட்டினார் சகுனி...

‘‘என் கணவருக்கு பயப்படும்படி ஒண்ணுமில்லேன்னு உங்க நர்ஸ் சொல்றாங்க... ஆனா நீங்க ஆபரேஷன் செய்யணும்னு சொல்றீங்களே டாக்டர்?’’
‘‘அந்த நர்ஸுக்கு என் கஷ்டத்தைப் பத்தி என்ன தெரியும்?!’’

‘‘டாக்டர் பட்டம் வாங்கின பிறகு தலைவர் ஆளே மாறிட்டாரா..?’’
‘‘ஆமா, தொண்டர்களை எல்லாம் ‘சப்ஜெக்ட்’னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு!’’

‘‘எனக்கு ஸ்கேன் எடுத்தீங்களே... அதுல என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க டாக்டர்?’’
‘‘கிட்னி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன்..!’’
 எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்