ஜோக்ஸ்



‘‘டிஸ்சார்ஜ் ஆகிப் போறப்ப பேஷன்ட் ஏன் அழறாரு..?’’
‘‘டாக்டர் பீஸ் கேக்கறாரு... நர்ஸ் நஷ்ட ஈடு கேட்கறாங்க!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நம்முடைய படையில் அதிகம் பேர் இருக்கிறார்களே... ஆட்குறைப்பு செய்து விடலாமா அமைச்சரே?’’
‘‘வேண்டாம் மன்னா... ‘போர் வருகிறது’ என்று சொல்லி விட்டாலே போதும்!’’
- இரா.வசந்தராசன், கல்லாவி.

தேங்காயை ஆட்டுனா தேங்காய் எண்ணெய் கிடைக்கும். கடலையை ஆட்டுனா கடலை எண்ணெய் கிடைக்கும். மண்ணை ஆட்டுனா மண்ணெண்ணெய் கிடைக்குமா?
- மண்ணில் உருண்டு புரண்டு தத்துவம் தேடுவோர் சங்கம்
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

‘‘உங்க ஆபீஸ் ஸ்டெனோவை ‘லேப் டாப்’னு கூப்பிடறீங்களே... ஏன்?’’
‘‘அடிக்கடி மேனேஜர் மடியில அவங்களை பாக்கலாம்... அதான்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஒத்தச் சடையில பூ வைக்கலாம்; ரெட்டைச் சடையில பூ வைக்கலாம்... ‘கழிசடை’யில பூ வைக்க முடியுமா?
- கண்றாவி ஃபிகருக்கும் கவலை இல்லாமல் கொக்கி போடும் கழிசடைகள் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘என்ன இது... சட்டையோட முன்பக்கம் வெளுத்திருக்கு... பின் பக்கம் அப்படியே அழுக்கா இருக்கு?’’
‘‘மற்ற சோப் பவுடரைவிட இதுல பாதி போட்டா போதும்னு டி.வி. விளம்பரத்துல சொன்னாங்கம்மா!’’
- கே.ராமச்சந்திரன், சென்னை-87.

‘‘தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்?’’
‘‘கட்சி தாவலுக்கு நிறைய பேர் விருப்ப மனு கொடுத்திருக்காங்களாம்... அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.