ஜோக்ஸ்



‘‘பொதுமக்கள் கிட்ட மாட்டிக்கிட்ட உடனே ஓடணும்னு ஏன் கபாலி தோணலை..?’’
‘‘இவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துடலாம்னு பேசிக்கிட்டாங்க ஏட்டய்யா...
அதனாலதான்!’’
 கி.ரவிக்குமார்,
நெய்வேலி.

‘‘யாரங்கே..?’’
‘‘மகாராணியை கரெக்ட் செய்து கொண்டிருக்கிறேன். டிஸ்டர்ப் செய்யாதீர்கள் மன்னா...’’
 வைகை.ஆறுமுகம், வழுதூர்.

‘‘இத்தனை வருஷமா அரசியல்ல இருக்கற தலைவருக்கு இதுதான் ‘முதல் கூட்டம்’னு எப்படிச் சொல்றே..?’’
‘‘இதுக்கு முன்னால
இவ்வளவு கூட்டத்தை அவர் பார்த்ததில்லையே!’’
 பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அவரு போலி பல் டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘பின்னே! எனக்கு ஒரு பல் ஆடுதுன்னு சொன்னா, ‘அப்ப மத்த பல்லெல்லாம் ஃபீல்டிங் பண்ணுதா’ன்னு கேட்கிறார்..!’’
 வி.சாரதி டேச்சு, சென்னை5.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். அப்போ கெட்டதொரு குடும்பத்தை போலி பல்கலைக்கழகம்னு சொல்ல முடியுமா?
 பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்காத கவலையோடு
சிந்திப்போர் சங்கம்
 டி.கே.சுகுமார், கோவை.

என்னதான் புகழ்பெற்ற லேடி வக்கீலா இருந்தாலும், ஒரு கேஸ் கீழ்கோர்ட்டில் தோத்துப்போச்சுன்னா ‘மேல்’ கோர்ட்டில்தான் அப்பீல் பண்ணியாகணும்;
‘ஃபீமேல்’ கோர்ட்டில் அப்பீல் பண்றேன்னு சொல்ல முடியாது!
 வக்கீல்களுக்கு பாயின்ட்ஸ் கொடுத்து பாயின்ட்டை அள்ளுவோர் சங்கம்
 ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.

‘‘கட்சி ஆபீஸ்ல ஏன் மின்வேலி போட்டிருக்கு..?’’
‘‘சொல்லாம கொள்ளாம தொண்டர்கள் கட்சி தாவுறதை தடை
பண்ணத்தான்!’’
 அம்பை தேவா, சென்னை116.