
*காலையில் சிணுங்கித் திட்ட
தேவையாகத்தான் 
இருக்கின்றன
சில திட்டுகள்
*அதற்கு மேல்
அதில் பேச
என்ன இருக்கிறது?
*உள்ளத்தை
ஏமாற்றிவிடலாம்
உடலை?
*யாராக இருந்தால் என்ன?
பரிசுப் பொருள்கள்
நகைகள்
ம்ஹும்...
அதற்கு அதுதான்
*தாழ்ப்பாள் தேவையற்ற
இருட்டிற்குள்
வெளிச்சமாதல் 
அழகு!
*உடலைத் தேடி 
உடுத்திக் 
கொள்வதில்
குழப்பம் 
செய்து 
கொண்டீர்களா
அது!
*பலர் படுக்கிறார்கள்
சிலர்தான்
பறக்கிறார்கள்
*வானத்தின் மீது
பூமி
அசைதல்
அடடே!