நிறைவேற்றிய சத்தியங்களுடனும், நிறை
வேற்றாத வாக்குறுதிகளுடனும், வாழ்க்கை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 
- பாரதி கிருஷ்ணகுமார்

கணவரிடம் கோபித்துக் கொண்டு ‘‘நான் எங்க அம்மா 
வீட்டுக்குப் போறேன்’’ என்று சொல்லும் மனைவிகள் முட்டாள்கள்... அம்மாவை தன் வீட்டிற்கு வரவழைக்கும் மனைவிகளே புத்திசாலிகள்!
# செத்தாண்டா சேகரு
- செல்லி சீனிவாசன்
என் அறியாமையில் 
ஆயிரம் அம்புகள் 
எய்து விட்டீர்கள் 
நீங்கள் குறி பார்த்து எய்ய 
வேறு இடத்தை 
தேர்ந்தெடுத்திருக்கலாம்
- ராஜா சந்திரசேகர்
காதலும் ‘நூடுல்ஸ்’ போலத்தான்! பருவ வயதில் வெறித்தனமாகப் பிடிக்கிறது. அதைத் தாண்டி வந்ததும் ‘அது நல்லதில்லை’ என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தோன்றுகிறது.
- விக்னேஸ்வரி சுரேஷ்
உன் பெயரை எழுதும்போதெல்லாம் பேனாவின் தலைக்கனம் தாங்காமல் காகிதம் 
கிழிந்து விடுகிறது...
- பெ.கருணாகரன்
‘‘என்னய்யா இது... மூணு நாளா பஸ் ஓடலையாம். பேச்சுவார்த்தை ஏதாவது நடத்துறாங்களா?’’
‘‘அய்யா, அந்தத் துறை மந்திரியே நீங்கதான்!’’
- கார்ட்டூனிஸ்ட் முருகு
சில நேரங்களில் மறதியும் நன்மை பயக்கும்... ரவை வாங்கிட்டு வரச் சொன்னா, மறந்துட்டேன். உப்புமா செய்யல!
- போட்டோக் கார்
மனதிற்குப் பிடித்தவர்களின் பெயரைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது என்ன மாதிரியான வியாதி?
- தோழி ஹாஜிரா
பொய் சொன்னா கடைசி வரை நாம அந்தப் பொய் கூடவே வாழ்ந்தாகணும்... உண்மையைச் சொன்னா அந்த உண்மைதான் கடைசி வரை நம்ம கூட வாழணும்.
- வடுவூர் ரமா
மனைவி பிறந்தநாளை மறக்காமல் நினைவில் வைத்திருப்பவன் அறிவாளி; மாமியார் பிறந்தநாளையும் நினைவில் வைத்திருப்பவன் மேதை.
- வெங்கடேஷ் ஆறுமுகம்
ஞாயிற்றுக்கிழமை மழையை ரசித்தவர்கள்
திங்கள்கிழமை மழையை வெறுக்கிறார்கள்
திங்கள்கிழமை மழையையும் நின்று ரசிக்கிறவர்கள்
குடையற்றவர்களாக இருக்கிறார்கள்
வெயிலற்றவர்களாக இருக்கிறார்கள்
கிழமையற்றவர்களாக இருக்கிறார்கள்
இன்னும் கொஞ்சம் குளிர்ந்து சொன்னால்
குரோதமற்றவர்களாகவும் இருக்கிறார்கள்...
மழையை வாசிக்கிறேன்.
- மாரி செல்வராஜ்
உறுமீனற்ற குளத்தில் ஒற்றைக்காலுடன் காத்திருக்கும் கொக்கு, பசித்துச் சாகிறது...
- சந்திரா 
twitter வலைப்பேச்சு@g_for_Guru    
ஒரு தெலுங்குப் பையன் கேட்டான், ஓ.பி.எஸ்.தான் இப்ப ஆக்டிங் சி.எம்.மான்னு. ‘‘இல்ல, அவரு சி.எம்.மா ஆக்ட் 
பண்ணிக்கிட்டி ருக்காரு’’ன் னுட்டேன்.
@i_rajtuty    
புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ் தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ் இருப்பதே போதுமானது! 
@SeSayv  
நமக்கு கனவுல யாராவது வந்தா, அவருக்கும் அந்த கனவு தெரியிறாப்ல இருந்தா, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்!
@kalasal  
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான் புரியும். அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்...
@iam_moorthy  
காதலித்துப் பார்... தரையில கால் நிக்காது. போன்ல சார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப!
@Carbon Karadi 
பயந்தோடிக் கொண்டிருப்பவன் பின்னே, விடாது துரத்துகிறது கால்தடம். நின்றால் பிழைப்பான்.
@itz Nandhu  
‘‘பணமெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’’ என்று சொல்பவர்தான் எவ்வளவு பொறாமைப்பட வைக்கிறார்!
@indira jithguru  
நல்லதொரு வம்பு அகப்பட்ட மகிழ்ச்சியில் அவுட்கோயிங் செய்யும் பெண், தான் ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டிய பாலினம் என்பதையே மறந்து விடுகிறாள்!
@naiyandi 
சின்ன வயசில நிறைய வைச்ச டைலர் இப்ப ஒரே பாக்கெட் வைச்சுதான் சட்டை தைக்கிறார்... எங்கிட்ட காசில்லன்னு சிம்பாலிக்கா சொல்றாரோ!
@skpkaruna  
பைக் ஓட்டிச் செல்லும் நண்பர்கள், மாநகரப் பேருந்துகளின் அருகில் செல்லாதீர்கள். பயிற்சி ஓட்டுநர்களின் கருணை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.
@Prabinraj1    
வருடத்தை நாள், வாரம், மாதம், ஆண்டாகக் கணித்தவன் கடைசியா சந்தோஷத்தில் அமர்ந்து சரக்கு போட்ட நாள்தான் முதல் நியூ இயர் கொண்டாட்டமா இருக்கும் :)
@adhavanKSM    
ரொம்ப நேரமா நகராமல் நிற்கும் டிராபிக்கிற்கு கடைசியாக வந்தவன் அடிக்கும் ஹாரன் போலத்தான் சமுதாயத்துக்கு நாம் சொல்லும் கருத்துக்களும்...
@senthilcp  
மோடியின் ஆட்சியில் நாட்டில் உள்ள சூழ்நிலை அவசர காலத்தைவிட மிகவும் மோசமாக உள்ளது: மம்தா பானர்ஜி # அவரு நிதானமாத்தானே டூர் போறாரு?
@barathi_  
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி மாயன் காலண்டர் இருந்தா நல்லா இருக்கும்ல! அவங்க அவங்க கடைசி நாளோட காலண்டர் முடிஞ்சிரும்!
@shanth_twits  
வயது முதிர்ந்த ஹோட்டல் சர்வரை ஏக வசனத்தில் அழைக்கும் சிறுகுழந்தையின் தொனியில் அறிய முடிகிறது, மேல்தட்டு மக்களின் மற்றவர் மீதான மனப்போக்கை!
@senthilcp  
ரயில் தாமதமானால் இலவச உணவு வழங்க இந்தியன் ரயில்வே முடிவு!# செத்தாண்டா சேகரு. திவால் ஆகப் போகுது ரயிலு...