குட்டிச்சுவர் அவார்ட்ஸ் 2014



‘நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சி’ விருது - விஜய் சேதுபதி‘நான் எப்படி வருவேன், எப்போ வருவேன்னு தெரியாது... ஆனா, வர வேண்டிய நேரத்துல வரமாட்டேன்’ விருது - உலகநாயகன் கமல்ஹாசன்‘அழ வைக்கிறதுல அண்ணன் மாதிரி ஒரு ஆள அமெரிக்காவுல கூட பார்த்திருக்க மாட்ட’ விருது - பிரபு சாலமன்
‘இங்கயே இருக்கலாமா? இல்ல, திரும்ப துபாயே போயிடலாமா’ விருது - லிங்குசாமி

‘வாராவாரம் வெள்ளிக்கிழமை வருதோ இல்லையோ... நான் வருவேன்டா’ விருது - விமல்
‘நீங்க கத்துனத கேட்ட பிறகு காது டாக்டருகிட்ட காமிச்சுட்டு வந்தேன் சார்’ விருது - ‘பூஜை’ விஷால்!

‘மூஞ்சிய காட்டாட்டியும் மனசுல நின்னீங்க’ விருது - இளைய தளபதி விஜய் (‘சதுரங்க வேட்டை’ பாம்பு)
‘பத்துக்கு பத்து மார்க்கெல்லாம் போட்டியேக்கா, இப்படி சொல்லிக்காம ஊருக்குப் போயிட்டியேக்கா’ விருது - நமீதா
‘ஏ.டி.எம் வாட்ச்மேன் பட்டாபியையும் கொட்டாவி விட வைத்த’ விருது - ‘யான்’ ரவி கே.சந்திரனுக்கு
‘பின் பாட்ட ஏண்ணே நிப்பாட்டுன? பாடு பாலுதாஸ் பாடு’ விருது - தா.பாண்டியன்
‘குளிருற வெண்ணைய விட்டுட்டு, கொதிக்கிற எண்ணெயில கை விட்ட’ விருது - குஷ்பு
‘குமுதா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி’ விருது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

‘தாய்ப் பாசத்துல இந்த ஏட்டையாவையே மிஞ்சிட்டீங்க’ விருது - ஓ.பன்னீர்செல்வம்
‘50 வயசு வரை ரொம்ப கஷ்டமா இருக்கும், அப்புறம் அப்படியே பழகிடும்’ விருது - ஞானதேசிகன்
‘ஹாயா வந்த புள்ளைய பேயா மாத்திட்டாங்க’ விருது - ‘அரண்மனை’ ஹன்சிகா
‘என்னடா அங்க சத்தம்? சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா’ விருது - அரவிந்த் கெஜ்ரிவால்
‘இதெல்லாம் பாவம் மை சன்’ விருது - அத்வானி

‘வொயிட்டு சார், ஹைட்டு சார், வெயிட்டு சார்’ விருது - விராட் கோலி
‘பழைய சைக்கிளுக்கு பெயின்ட் அடிச்சேன், ஆனா ரவுண்டடிக்கல’ விருது - ஜி.கே.வாசன்
‘சுத்தி சுத்தி விக்ஸ் என்கிறதைத்தான் எழுதி இருக்கேன்’ விருது - ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பார்த்திபன்
‘கூழ் வாங்க போன இடத்துல பால் ஊத்திட்டாங்க பாஸ்’ விருது - ராகுல் காந்தி
‘உலகத்துல ரெண்டே புத்திசாலிங்க; ஒண்ணு ஜி.டி.நாயுடு, இன்னொண்ணு ஐ ஆம்’ விருது - அன்பு மணி ராமதாஸ்
‘நாட்டாமை, இட்லி வெந்து போச்சு, ஆனா நீதி செத்துப் போச்சு’ விருது - வைகோ

‘நீ என் ஆளுன்னு சொல்லியுமா அடிச்சான்? அதை சொன்ன பிறகுதானே அடிச்சான்’ விருது - எச்.ராஜா
‘இப்படி சொன்னா நம்பமாட்டோம், மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு சொன்னாதான் நம்புவோம்’ விருது - டோனி
‘நாட்டுல குண்டூசி விக்கிறவங்க, கோணி ஊசி விக்கிறவங்க எல்லாம் தொழிலதிபர்’ மொமன்டோ - தமிழருவி மணியன்
‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே’ விருது - நாராயணசாமி

‘ஹலோ, பிரபா ஒயின்ஸ் ஓனரா, கடைய எப்ப சார் திறப்பீங்க’ விருது - சிம்பு
‘பைக்க கொண்டுபோய் பனைமரத்துலயும், டாடா சுமோவ தென்னை மரத்துலயும் பார்க் பண்ணின’ விருது - ஹரி
‘இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சுடுவாங்கப்பா’ விருது - ராமதாஸ்

‘தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவர் ஹானர்... ஆதலால் தகுந்த சட்டத்த வைத்து’ விருது - ஏ.ஆர்.முருகதாஸ்
‘ஊட்டிக்கு தனியாத்தான் போகணும் போல’ விருது - கேப்டன்
‘சோட்டா பீம், உன்னால இந்த நாட்டுக்கே பெருமை’ விருது - சூப்பர்ஸ்டார்

‘குடை புடிச்சுட்டு போற பெரியவரே, வணக்கமுங்க’ விருது - அன்னா ஹசாரே
‘ஆறு மாசத்துல அணை கட்டுன என்னை, ஹைகோர்ட்டுல பணம் கட்ட வச்சுட்டாங்க ப்ளடி இடியட்ஸ்’ விருது - கே.எஸ்.ரவிக்குமார்
‘உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்’ விருது - சச்சின்
‘பெண்ணென்றால் பேயும் இரங்குறப்ப, பெண்ணை பேயா கயிறுல இறக்கிட்டீங்களே’ விருது -
மிஷ்கின்

‘லுங்கியதான் கழட்டி வை டஸ்ட் படுது, அந்த ஜீன்ஸ் பேன்ட துவைத்து வை யூத்து வருது!’ - ‘பிரம்மன்’ சசிக்குமார்

‘ஆத்தா, நான் பாசாயிட்டேன்’ விருது - ‘ஜிகர்தண்டா’ பாபி சிம்ஹா
‘ஏம்பா, நாயிக்கு பேர் வச்சியே, சோறு வச்சியா’ விருது - சிபிராஜ்

‘ஹலோ தன்ராஜா? வர்ற 18ம் தேதி டெல்லில பிரதமரோட மீட்டிங் இருக்கு’ விருது - நடிகர் கார்த்திக்‘அடேங்கப்பா, இது உலக நடிப்புடா சாமி’ விருது - சரத்குமார்
‘எத்தனை தடவ சொல்லியிருக்கேன், கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதன்னு’ விருது - சந்தானம்   -   பரோட்டா சூரி