ஜோக்ஸ்



தனபால், பீர்பால், கோபால்னு பேர் வைக்க முடியும். நோபால், வாலிபால்னு பேர் வைக்க முடியுமா?- பேர் ராசி எடுபடாத பேராசைக்காரர்கள் சங்கம்
- ஆர்.சீதாராமன், சீர்காழி.

‘‘ஆஸ்பத்திரியில ரெண்டு கலர்ல டோக்கன் குடுக்கறாங்களே... எதுக்கு?’’‘‘ஒண்ணு மருந்து வாங்க...
இன்னொன்று நர்ஸைப் பார்க்க!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

சாதத்தை சாப்பிடலாம்; பிரசாதத்தையும் சாப்பிடலாம். ஆனா வரப்பிரசாதத்தை சாப்பிட முடியுமா?
- மேகதாது அணை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சாம்பாரால் சாதத்தில் அணை கட்டுவோர் சங்கம்
- மு.மதிவாணன், அரூர்.

‘‘எதுக்கு மொழிபெயர்ப்பாளர் கேட்கறீங்க?’’
‘‘தலைவர் குடிபோதையில பேசறதை தொண்டர்களுக்குச் சொல்ல!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘யோவ்... கொஞ்ச காலம் அரசியல் பணிகளைத் துறந்துட்டு புத்துணர்வு யாத்திரை போகப் போறேன். யாரும் என்னைத் தேடாதீங்க!’’
‘‘நீங்க போங்க தலைவரே! சி.பி.ஐயைத் தவிர ஒரு பயலும் உங்களைத் தேட மாட்டான்!’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? கண்டுபிடித்த போலீஸ்க்கு மாமூல் கொடுத்தாயா? எதற்கு கேட்கிறாய் வரி?’’
‘‘ஒண்ணுமில்ல... இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘உங்கள பாக்க வந்திருக்காங்க தலைவரே...’’
‘‘அப்பாயின்ட்மென்ட் வெச்சிருக்காங்களா..?’’
‘‘அரெஸ்ட் வாரன்ட்டே வெச்சிருக்காங்க!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.