ஜோக்ஸ்



இந்த பெட்ல இருந்த பேஷன்ட் எங்கே..?’’
‘‘பரோல்ல பத்து நாளைக்கு
வீட்டுக்கு
அனுப்பி
யிருக்கோம்!’’
- வீ.விஷ்ணு
குமார்,
கிருஷ்ணகிரி.

‘‘நான்தான் சொன்னேனே சார்... எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு!’’
‘‘அதுக்காக ஆபீஸ்லேருந்து எழுந்து வீட்டுக்கு போயிடறது நல்லாயில்லை..!’’
- வி.சாரதி டேச்சு,
சென்னை-5.

மன பாரத்தோட உங்ககிட்ட வந்தேன். உங்களைப் பார்க்கறதுக்கு முன்னாடியே பாரம்
சுத்தமா குறைஞ்சு போச்சு டாக்டர்!’’
‘‘வர்ற வழியில நர்ஸை பார்த்துட்டீங்களா?’’
- ஆர்.சீதாராமன்,
சீர்காழி.

‘‘தலைவரே... கூட்டம் உங்களை இன்னும் கொஞ்ச நேரம் பேசச் சொல்லுது...’’
‘‘ஏன்யா?’’
‘‘வீசின நாலு செருப்புல,
 ஒண்ணுகூட உங்கமேல
 படலையாம்!’’
- பர்வீன் யூனுஸ்,
ஈரோடு.

பொண்ணு குணம்
எப்படி?’’
‘‘அரைமணி நேர சீரியலுக்கு ஒரு மணி நேரம் அழுவா..!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

என்னதான் நகைக்கடைக்காரர் மகனா இருந்தாலும் அவனுக்கு தேர்வுல ‘பாஸ்மார்க்’ போடுவாங்க; அல்லது ‘ஃபெயில் மார்க்’ போடுவாங்க. ‘ஹால்மார்க்’ போடுவாங்களா?
- தேர்வு எழுதிவிட்டு மார்க்கை நினைத்து குழம்பிக் கொண்டிருப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

கடையில தீபத்தை விலைக்கு வாங்கினா இருளைப் போக்கலாம். ஆபத்தை விலைக்கு
வாங்கினால்...?
- இருட்டை வைத்துக்கூட தத்துவ விளக்குஎரிக்க முயல்வோர் சங்கம்
- அ.ராஜப்பன், சென்னை-91.