நியூஸ் வே



‘கெத்து’ ஷூட்டிங் சமயம் இரவு நேரங்களில் கூட ஓய்வில்லாமல், தனது இந்திப் பட கேரக்டருக்காக பாக்ஸிங் பிராக்டீஸ் பண்ணியிருக்கிறார் எமி. அந்தப் பொறுப்புணர்வைப் பார்த்து யூனிட்டே அசந்துவிட்டதாம்!

சிம்பு ட்விட்டரிலிருந்து விலகியதற்கு அப்பா இட்ட கட்டளைதான் காரணமாம். ‘‘உன் வெளிப்படை பேச்சு பிரச்னையாகி விடுகிறது. கொஞ்ச காலத்திற்கு விலகியிரு... நானே கவனித்துக்கொள்கிறேன்!’’ என்று சொன்ன பிறகே சிம்பு அறிக்கை வந்தது.

எழுத்தாளர், கவிஞர் சந்திராவும் சினிமா உலகில் நுழைகிறார், இயக்குநராக! கரு.பழனியப்பன் ஹீரோவாக, ‘கள்ளன்’ என்ற பெயரோடு படம் ரெடியாகிறது!

டெல்லி மாணவி நிர்பயா சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‘India’s Daughter’ ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது தெரியும். சமீபத்தில் அது சீனாவில் பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.

‘தூங்காவனம்’ போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளின்போது, வேலையை முடித்துவிட்டு  ஸ்டுடியோவிலேயே தூங்கி விட்டாராம் கமல். அவரது சினிமா
ஆர்வத்தையும், அக்கறையையும் பார்த்து யூனிட்டே வியந்துவிட்டதாம்.

அட்லி இயக்கி வரும் ‘விஜய் 59’ படத்தில், விஜய் போலீஸ் அதிகாரி. அவரது ஜீப் டிரைவர் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என அலசி ஆராய்ந்ததில், கடைசியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை டிக் அடித்திருக்கிறார் விஜய். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி
கலகலக்கும் என்கிறது யூனிட்.

அட்லி இயக்கி வரும் ‘விஜய் 59’ படத்தில், விஜய் போலீஸ் அதிகாரி. அவரது ஜீப் டிரைவர் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என அலசி ஆராய்ந்ததில், கடைசியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை டிக் அடித்திருக்கிறார் விஜய். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி கலகலக்கும் என்கிறது யூனிட்.

‘‘மு லாயம்சிங் யாதவ் என்ன மதச்சார்பின்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா? எங்களுக்கு மதச்சார்பின்மை சான்றிதழை அவர்தான் தர வேண்டுமா?’’ - தேர்தல் பிரசாரத்தில் இப்படி வெடித்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தேர்தல் ஆரம்பிக்கிறது. சூடு பறக்கிறது இதனால்!

உலகெங்கும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த மாதம் 90 கோடியை எட்டியிருக்கிறது. இத்தனை பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வெறும் 50 எஞ்சினியர்கள்தான்.

நடிகர் ஷாருக் கானின் பக்ரீத் கொண்டாட்டத்திற்காக கர்நாடகாவிலிருந்து 250 கிலோ எடை கொண்ட இரண்டு ‘டெக்கானி’ செம்மறிஆடுகள் மும்பை பறந்திருக்கின்றன. இவற்றின் விலை, ரூ.1.1 லட்சமாம்!

ஜிம்முக்குப் போனாலும் கூட, சைக்கிளிங்கின் மகத்துவத்தை உணர ஆரம்பித்திருக்கிறார் சார்மி. ‘‘உடம்பு ஃபிட் ஆகுறதுக்கு சைக்கிளிங் சரியான சாய்ஸ். வாரத்துல ரெண்டு நாள் ஷால் போட்டு முகத்தை மூடிக்கிட்டு, சைக்கிள்ல சுத்துறதே தனி சுகம்!’’ என ஃபீலாகிறார் லேடி பேர்டு சார்மி.

‘‘இங்கே ஜி.வி.பிரகாஷுடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரைப் போல வெர்ஜின் பாய்தான் என்பதைக் காட்டு
கிறது!’’ - சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ ஃபங்ஷனில் இப்படிச் சொன்னது பாரதிராஜா!

தமிழில் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, சிம்ஹாவுடன் ‘கோ 2’ படங்களில் நடிக்கிறார் நிக்கி கல்ரானி. இது தவிர தெலுங்கில் ஒன்று, மலையாளத்தில் ரெண்டு என தென்னிந்தியா முழுவதும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நிக்கி!

‘மந்துடு’வுக்கு அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வரும் ‘பிரமோற்சவம்’ படத்தில் சமந்தா, காஜல், ப்ரணிதா என 3 ஹீரோயின்கள். நம்மூர் சத்யராஜ், ரேவதியும் மெயின் கேரக்டரில் நடிக்கின்றனர்.

அமெரிக்காவின், ‘MIT Technology Review’ பத்திரிகையின் உயரிய விருதைப் பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ராகுல் பணிக்கர். குழந்தைகளுக்கான குறைந்த விலை இன்குபேட்டரை கண்டு பிடித்ததற்காக இந்த விருது. ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த இன்குபேட்டரை 15 நாடுகளில் இரண்டு லட்சம் குழந்தைகளுக்குப் பயன்படுத்தி சாதித்திருக்கிறார் ராகுல்!

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி காய்கறி மார்க்கெட்டில் துப்பாக்கி ஏந்திய காவலர் படையை நியமித்திருக்கிறார்கள் அங்குள்ள வணிகர்கள். காரணம், சேமிப்புக் கிடங்கில் இருந்த நானூறு கிலோ வெங்காயம் திருடு போய்விட்டதுதான்!

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்திருக்கும் ‘24’ படத்திற்கு மியூசிக், ஏ.ஆர்.ரஹ்மான். போலந்து நாட்டில் இரண்டு பாடல்களின் படப்பிடிப்போடு ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது.