ஒன்றையொன்று சந்திக்காத வில் அம்பு!



‘‘நிறைய அவகாசம் எடுத்துக்கொண்டு என்னையும் புதுப்பிச்சுக்கிட்டு செய்கிற படம் ‘வில் அம்பு’. சில ஸ்கிரிப்ட்தான் ‘வந்து பாருடா மகனே’ன்னு பிடிச்சு இழுக்கும். ‘ஆழமா இறங்கலாம்’னு பரபரக்கச் சொல்லும்.

‘வில் அம்பு’ அப்படி ஒரு பரபரப்பை எனக்குள் முடுக்கி விட்டிருக்கு. இரண்டு ஹீரோக்களின் கதை. ஜனங்க என்னை மாதிரி டைரக்டர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது இரண்டரை மணி நேரம்தான். அதுக்குள்ள நான் அவங்களை சந்தோஷப்படுத்தணும். அதை ‘வில் அம்பு’வில் செய்திருக்கேன்!’’- ஆழ்ந்து பேசுகிறார் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம். சமுத்திரக்கனியிடம் பாடம் பயின்றவர்.‘‘தலைப்பு வசீகரமாக இருக்கு.

எப்படியிருக்கும் படம்?’’‘‘இதில் திரைக்கதை நிச்சயம் புதுசு. உயிரையும் உணர்வையும் கலந்து உருவாக்கின ‘வில் அம்பு’ இது. பொதுவா, இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்னா இரண்டு பேரும் இணைபிரியாத நண்பர்களா இருப்பாங்க. அல்லது, முறைச்சுப் பார்க்கிற பகையோட இருப்பாங்க. அல்லது, இரண்டு பேருக்கும் தொடர்பு இருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.

ஹீரோக்கள் ஹரீஷ் கல்யாண், இரண்டு பேரும் ஒருத்தர் வாழ்க்கையில் ஒருத்தர் அவங்களை அறியாமல் வந்துக்கிட்டே இருப்பாங்க. கடைசி வரைக்கும் அவங்க சந்திக்காமல், ஒரே வாழ்க்கையில் சம்பந்தப்படுவாங்க. ஆடியன்ஸ்க்கு மட்டும்தான் என்ன நடக்கும்னு தெரியும். ஹீரோக்களுக்குத் தெரியாது. நாம் என்ன நினைக்கிறோம், எப்படி இயங்குகிறோம் என்பதெல்லாம் தலைவிதின்னு சொல்வோம்.

இன்னிக்கும் நமக்கு ஒரு நல்லது, கெட்டது நடந்தா அது இன்னொரு மனிதனால் மட்டுமே நடக்கும். நம்ம லைஃப் டிசைன் நம்மால் போடப்பட்டதல்ல. புதுசான திரைக்கதையிலும், ஹரீஷ்,  போன்ற இரண்டு இளைஞர்களின் கடின உழைப்பிலும் படம் நல்லா வந்திருக்கு. படம் கடைசி ரசிகன் வரைக்கும் போய்ச் சேரணும்ங்கிறதுதான் என் நம்பிக்கை. சேரும்!’’‘‘ஹரீஷ் கல்யாண்,  இரண்டு ஹீரோக்களையும் நம்பி இருக்கீங்க! எப்படி இருக்காங்க?’’

‘‘ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய் புகுந்துகொள்கிற ஆர்வம் ஹரீஷ்கிட்ட இருக்கு. நான் எப்படியெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்னு கேள்விகளால் துளைத்தெடுப்பார். இப்படி ஆசைப்படுகிற ஒரு ஹீரோவைப் பார்த்தா, ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எனக்கும் இருந்தது. அந்த அக்கறைதாங்க வெற்றி. யும் அருமை. பாலாஜி சக்திவேல், மிஷ்கின் இவங்ககிட்ட இருந்து தொழில் நேர்த்தி தெரிஞ்சுக்கிட்டவர். குடிசைப் பகுதி பையனா அப்படியே வாழ்ந்திருக்கிறார். இரண்டு பேரும் சரிக்கு சமமா உழைச்சு நடிச்சிருக்காங்க.

ஹரீஷ் போட்டோகிராபியில் ஆர்வமா இருக்கிற பையனா வர்றார். இரண்டு பேருடைய இயல்பும் அடுத்தடுத்து மாறுகிற கட்டங்கள்தான் படத்தின் உயிரே. வெடவெடன்னு உயரத்துல, சிரிப்புல மனசை அள்ளிட்டுப் போற பையனா எல்லோருக்கும் ஹரீஷைப் பிடிக்கும்!’’‘‘ஏகப்பட்ட பெண்கள் அணிவகுக்கிறாங்க..?’’

‘‘சிருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினின்னு மூணு டீன் டிக்கெட்ஸ். இவங்க வருகிற போர்ஷன் எல்லாமே இளமையின் திருவிழா. தடதடனு போய்க்கொண்டு இருக்கிற கதையில் இவங்க பகுதி எல்லாமே ரொமான்டிக் ரிலீஃப். யோகி பாபு காமெடியில் களைகட்டுகிறார்.

 இப்பவெல்லாம் அவரை திரையில் பார்த்தாலே சிரிப்பு வருகிற அளவுக்கு வந்துட்டார். ‘மெட்ராஸ்’ படத்தில் கலக்கிய புரொடியூசர் நந்தகுமாரும், ஹரீஸ் உத்தமனும் மிரட்டுகிற வில்லன்களாக வருகிறார்கள்!’’
‘‘பாடல்கள் பிரபலமாகியிருக்கு...’’

‘‘நவீன் இப்போது வளர்ந்து வருகிற, நல்லா ஃபார்மில் இருக்கிற மியூசிக் டைரக்டர். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜாவிடம் இருந்தவர். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு படத்தில் இருக்கிற மூணு பாட்டுக்கு அனிருத், ஜி.வி.பிரகாஷ், இமான் மூணு பேரும் ரகளையா பாடிக்கொடுத்திருக்காங்க.

 அதில் யாரு சூப்பரா களை கட்டியிருக்காங்கன்னு சொல்றது சாதாரண வேலையில்லை. கடைசியில் ‘இரண்டு கண்ணுல எந்தக் கண்ணு பெரிசு’ங்கிற மாதிரிதான் முடிக்க வேண்டியிருக்கும் மணிகண்டனின் உதவியாளர் மார்ட்டின் ஜோதான் கேமரா. அவருக்கும் படத்துக்கும் நல்ல பேரை வாங்கித் தரும் அவரோட கைவண்ணம்!’’‘‘உங்க ரூம்மேட் சுசீந்திரன் கொடுத்த வாய்ப்பு இல்லையா இது?’’

‘‘கொஞ்ச நஞ்ச நாட்கள் இல்லை. கிட்டத்தட்ட 14 வருடங்கள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைத் தாண்டி வந்திருக்கோம். எவ்வளவு கஷ்டத்திலும் பிரியத்தை கைவிட்டதில்லை. மனசுக்கு உகந்த நண்பன். தான் ஏணியில் ஏறிட்ட பிறகு  தன் நன்பணும் மேலே வரணும்னு உண்மையான மனசோட ஆசைப்படுகிறவர்.

அவர் சகோதரர் தாய் சரவணனும், நந்தகுமாரும் எடுக்க நினைச்ச திரைப்படத்தை என்னை வச்சே டைரக்ட் செய்யலாமேன்னு அடையாளம் காட்டினார். அவருடைய அன்புக்கும், தயாரிப்பாளர்கள் கொடுத்த படைப்பு சுதந்திரத்திற்கும், மக்களோட ரசனைக்கும் கொடுக்கிற மரியாதையாக மட்டுமே இந்தப் படத்தை
நினைக்கிறேன்!’’

- நா.கதிர்வேலன்