எஞ்சினியர்களுக்கு மத்திய அரசுப் பணி! 588 பேருக்கு வாய்ப்பு!



போட்டித் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற மத்திய அரசின் உயர் பதவிகளை நிரப்பும் பணியில் யு.பி.எஸ்.சி., ஈடுபட்டு வருகிறது. அதேபோல எஞ்சினியரிங் தேர்வையும் நடத்துகிறது. இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான எஞ்சினியரிங் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில்வே, ஆயுத தொழிற்சாலை, மத்திய மின்துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் காலியாக உள்ள 588 இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.கல்வித்தகுதி: சிவில் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேசன் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 1.8.2018 ம் தேதி அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2017
மேலும் விவரங்களுக்கு http://upsc.gov.in/sites/default/files/Notification_ESE_2018_Engl_Revised.pdf என்ற இணையதள லிங்கை பார்க்கவும்.