மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை! 1053 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

நாட்டின் மிகப் பெரிய மெட்ரோ ரயில்நிலையங்களில் முதன்மையானது, முக்கியமானது மகாராஷ்டிராவில் இயங்கிவரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன். உலகின் பெரிய வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பையை இணைக்கும் இந்த ரயில்வே கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

காலியிடங்கள்: ஸ்டேஷன் மாஸ்டர், ஸ்டேஷன் கன்ட்ரோலர், செக்‌ஷன் எஞ்சினியர், ஜூனியர் எஞ்சினியர், டிராஃபிக் கன்ட்ரோலர், ஸ்டோர் சூப்பர்வைசர், ஹெல்பர், டெக்னீஷியன் போன்ற 34 வகையான பிரிவின் கீழ்  சுமார் 1053 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: பல்வேறு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படுவதால் பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித் தகுதி மாறுபடுகிறது. Helper & Technician பணி
களுக்கு Electronic Mechanic/ Electronic Communication/ IT/Electronic System Maintenance/Wireman/ Mechanic/Welder/ Machinist போன்ற தொழிற்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Helper பணிக்கு பணி அனுபவம் தேவையில்லை.

HR Assistant பணிக்கு இளநிலை பட்டத்துடன் MBA/PG டிப்ளோமா படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Commercial Assistant பணிக்கு  இளநிலை பட்டத்துடன் Railway / Airport துறையில் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். Security Assistant பணிக்கு ஏதாவதொரு பட்டப்படிப்புடன் முப்படைகள் / துணை ராணுவப்படைப் பிரிவில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். மற்ற பணிகளுக்கு Electrical / Mechanical / Electronic / Civil போன்ற துறைகளில் எஞ்சினியரிங் முடித்திருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் மூன்று வருடங்கள் முதல் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: பல்வேறு பணியிடங்களுக்கு வெவ்வேறு வயது வரம்பு என்றாலும் 30 வயதுக்கு மேல் 43 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: மும்பை மெட்ரோ கழகத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mmrda.maharashtra.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300ஐ செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SC / ST/ OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150ஐ செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 7.10.2019. மேலதிக தகவல்களுக்கு www.mmrda.maharashtra.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா