நாட்டுக்காய்கறிகள் மிக்ஸ் சாலட்



என்னென்ன தேவை?

புடலங்காய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பீர்க்கங்காய் - 50 கிராம்,
தண்ணீர் - 50 மி.லி.,
வெண்டைக்காய் - 100 கிராம்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
சுரைக்காய் - 100 கிராம்,
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
நீர்ப்பூசணிக்காய் - 50 கிராம்,
பெங்களூர் தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் பீர்க்கங்காய், வெண்டைக்காய், புடலங்காய், சுரைக்காய், தண்ணீர், உப்பு சேர்த்து அரைப்பதத்திற்கு வேகவிட்டு இறக்கி ஆறவிடவும். ஒரு பவுலில் வெந்த காய்கள், நீர்ப்பூசணிக்காய், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.