மெலன் மிக்ஸ் ஜூஸ்



என்னென்ன தேவை?

முலாம்பழம் - 2 கப்,
தர்பூசணி - 1 கப்,
பால் - 200 மி.லி.
தேன் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முலாம்பழம், தர்பூசணியின் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி பால் சேர்த்து மிக்சி அல்லது ப்ளெண்டரில் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் ஜில்லென்று பரிமாறவும்.