சோனாவுக்கு கிளாமர் இல்லை



சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நட்புக்காக ஒரு பிரபல நடிகரை நடிக்க கேட்டார்களாம். அந்த பிரபலமும் ‘கரும்பு தின்னக் கூலியா’ என்று உடனே நடித்துக் கொடுத்தாராம்.

யார் அந்த பிரபலம்? நம்ம பவர் ஸ்டார்தான். ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’  படத்தில் சகுந்தலாதேவி என்ற வில்லியாக நடிக்கிறார் சோனா. ஆனால் மருந்துக்குக் கூட இதில் அவருக்கு கிளாமர் டிரஸ் இல்லையாம்.

சரத்குமார் டபுள் ஆக்ஷனில் நடிக்கும் படம் ‘சண்ட மாருதம்’. இயக்கம் ஏ.வெங்கடேஷ். க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் இயக்கு நருடன் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளாராம். இந்தப் படத்தின் கதையை சரத்குமார் எழுதியுள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோவில் கோவிலாக வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள் ளார் தன்ஷிகா.

இயக்குநர் ஹரியிடம் காஸ்ட்லியான கார் இருந்தும் லோக்கல் ஏரியாவில் ரவுண்ட் அடிக்க டூ-வீலரைத்தான் பயன்படுத்துகிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் இசையமைப்பாளர் சத்யாவும் அடுத் தடுத்த வீடுகளில் வசித்தாலும் இதுவரை இருவரும் ஒருமுறைகூட சந்தித்தது இல்லையாம்.

-எஸ்