தண்ணில கண்டம்



லோக்கல் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார் தீபக். அவருக்கு புகழ் பெற்ற சேனலில் தொகுப்பாளராக வேலை செய்ய வேண்டும் என்பது கனவு. ஒரு நாள் அந்தக் கனவு நனவாகிறது.

வந்த இடத்தில் இவரை விட செல்வாக்கான ஒருவருக்கு வாய்ப்பை வழங்குகிறது தொலைக்காட்சி நிறுவனம். வாழ்வதா, சாவதா என்கிற குழப்பத்தில் இருக்கும் தீபக் தன் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் அசைன்மென்ட் கொடுக்கிறார். அது எப்படி நடக்கிறது என்பதை காமெடி பாதி, சஸ்பென்ஸ் பாதி  கலந்து  சொல்லியிருக்கிறார்கள்.

புதுமுகம் தீபக், தொகுப்பாளர் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். பெரிய இயக்குனர்கள் பார்வை விழுந்தால் புள்ள மார்க்கெட் சூடு பிடிப்பது உறுதி. ஹீரோயின் நேகா ரத்னாகரன் சிறப்பு. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் லேட்டாக என்ட்ரி கொடுத்தாலும் மொத்த தியேட்டரையும் சிரிக்க வைக்கிறார். குமரவேல், சென்றாயன், எம்.எஸ்.பாஸ்கர் தங்கள் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். சிரிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் சக்திவேல் சிக்ஸர் அடித்திருக்கிறார்.