பார்வதியின் பிசினஸ் ஐடியா!



அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’, கமலுடன் ‘உத்தம வில்லன்’ என்று உச்சி நோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும் ஒரு பிசினஸ் செய்யவேண்டும் என்றே பார்வதி நாயர் விரும்புகிறார். கணினி துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பதால், அதுசார்ந்த தொழிலைச் செய்யும்படி நலம் விரும்பிகள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம்.

வெல்விஷர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, சொந்தப்படம் தயாரித்து, நடிக்க முடிவுசெய்திருக்கிறாராம் தமன்னா. புத்துணர்ச்சியோடு ஆர்.கே.செல்வமணி களம் இறங்கியிருப்பதைப்போல அவரது பட்டறையில் பாடம் படித்த உதவியாளர்களும் கோதாவில் குதிக்கிறார்கள்.

‘என்னோடு வா என் மனமே’ என்கிற டைட்டிலுடன் முற்போக்கான காதல் கதையைக் கையிலெடுத்திருக்கிறார் அவரது சிஷ்யர் எம்.பாண்டியன். எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் படம் இது.