ரீடர்ஸ் கிளாப்ஸ்!



கொஞ்சம் தூக்கல்தான்

இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து நெல்பா எழுதிய ‘என்றும் இசைப்பார் எம்.எஸ்.வி’ கட்டுரையும், எம்.எஸ்.வி.யின் இசையைப் போலவே என்றும் நெஞ்சை விட்டு நீங்காது.- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

ஸ்டார் புரொபைலில் இடம்பெற்ற நிவேதா தாமசுக்கு லைட்டாக மீராஜாஸ்மின் ஜாடை இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் அஜித்தின் ஜோடியாக நடிக்கத்தான் போகிறார். நாமும் பார்க்கத்தான் போகிறோம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘பாகுபலி’ விமர்சனம் அருமை. படம் கொடுத்த பிரும்மாண்டத்தை அப்படியே எழுத்தில் கொண்டுவந்து பரவசப்படுத்தி விட்டீர்கள். ஆளுயர மாலையை அசுரத்தனமாக உழைத்து படமெடுத்த இயக்குனருக்கு வண்ணத்திரை சூட்டியது சிறப்பான கவுரவம்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரன்பட்டி.

மார்ஃபிங் கலாச்சாரத்தால் நடிகைகள் மட்டுமல்ல, சாதாரண பெண்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். லட்சுமி மேனன், அதற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
- நீலகண்டன், ஈரோடு

டப்பிங் படங்கள் குறித்து இளக்காரமான பார்வையே நிலவுகிறது. அதை முற்றிலும் உடைத்தது டப்பிங் ராஜாவின் பேட்டி.
- ஜோசப் ஸ்டாலின், நாகை.

நடுப்பக்க நடிகையின் மேக்கப் மட்டுமல்ல, இதழ் முழுக்க புளோ அப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும் கமெண்டுகளும் கூட கொஞ்சம் தூக்கல்தான்.
- செல்வி, விருதுநகர்.

தனுஷோடு நடிக்க சோனியா அகர்வால் தயாராக இருக்கலாம். ஆனால் தனுஷின் ரேஞ்சே இப்போ வேற ஆச்சே! அதுவுமில்லாமல் முன்னாள் அண்ணியோடு ஜோடி சேர்ந்து நடிக்க தனுஷுக்கு கூச்சமாக இருக்காதா?
- நந்தா, கீழ்கதிர்பூர்.