பச்சை குத்த ஏத்த இடம்?



சரோஜாதேவி பதில்கள்

* எந்தக் காய் இனிக்கும்; எந்தப் பழம் கசக்கும்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

காயோ பழமோ... கசப்போ இனிப்போ... சிக்கனோ மட்டனோ... டேஸ்ட்டாக இருந்தால் போதாதா?
* நீங்க கன்னியா, அண்ணியா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

கேள்வியை இதோட நிறுத்தினீங்களே? சந்தோஷம்.
* வெண்டைக்காயை ஏன் லேடீஸ் ஃபிங்கர் என்கிறோம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

என்ன கேக்க வர்றேள்னு தெரியுது மாமோய்.
* பச்சை குத்துவதுக்கு ஏத்த இடம் எது சரோ?
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

எங்கே கேப் கிடைக்குதோ, அங்கே குத்த வேண்டியதுதான். அதிருக்கட்டும், உங்க ஊர்ப்பேரு ஏன் ஒரு மாதிரியா இருக்கு?
l காதலி அருகில் இருக்கும்போது பசியெடுக்கமாட்டேன் என்கிறதே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பழமுதிர்ச்சோலையே அருகிலிருக்க பசி எப்படி எடுக்கும்?