சுடச்சுட ஐஸ்க்ரீம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘சின்ன மச்சான்’ செந்தில் கணேஷ் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. கிராமத்திலிருந்து வந்து சினிமாவில் யாரேனும் சாதித்தால், நாமே சாதிப்பதைப்போல சந்தோஷம்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

மருத்துவ உலகின் கருப்புப் பக்கங்களை தோலுரித்துக் காட்டிட வர இருக்கும் ‘ஒளடதம்’ படத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஜெய்சங்கரின் தீவிர ரசிகராக இன்றுவரை இருந்து வரும் அடடே ரசிகர் சேஷன் பற்றிய கட்டுரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உலகத்துலேயே சுடச்சுட ஐஸ்க்ரீம் கொடுத்த ஒரே இதழ் நம்ம ‘வண்ணத்திரை’தான். நடுப்பக்க ஐஸ்க்ரீம், செம ஹீட்டு தலைவா!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘அடிக்கிற கை அணைக்குமா?’ என்கிற கேள்விக்கு சரோஜாதேவி கொடுத்த பதில் தத்துவார்த்தமானது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘இன்று நேற்று நாளை’ ராம்தாஸின் கட்டுரையில் நாளை பற்றி பயமோ, திட்டமோ எதுவுமில்லை என்று திறந்த மனதோடு கூறியது அருமை.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அப்படி, இப்படி கில்மாவாக நடந்து கொண்டாலும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வரும்போது தட்டிக் கொடுத்து பாராட்டுவதில் யாருக்கும் ‘வண்ணத்திரை’ சளைத்ததில்லை என்பதை நான்கு பக்க ‘வடசென்னை’ விமர்சனம் எடுத்துக் காட்டியது.
- குந்தவை, தஞ்சாவூர்.