இன்னொரு ஜாதகக் கதை!



அலர் ஸ்டூடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இதன் நாயகன் ஆனந்த் நாக். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம். பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு காசி விஷ்வா. இசை ஜேவி மற்றும் நரேஷ். படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில் ‘‘படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவற்றின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம்  மற்றும் நல்ல நேரம் போன்றவற்றைப் பார்த்து பயன்படுத்தி  தீர்த்துக் கொள்கிறான்.

அப்படி ஒரு பிரச்சினை வர, ஜாதகம் கூறுவதைக் கடைப் பிடித்து அந்த பிரச்சினையில் இருந்து வெளிவருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன்.  கதாநாயகனின் ஏழு நாள் பயணம்தான் படம்’’ என்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன்.

- ரா