ஜோக்ஸ்



‘‘அடுத்ததாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் புஷ்பாவோட புருஷன் பேசுவார்...’’
‘‘ராஸ்கல்! இதுக்குத்தான் என் மனைவி பேர் என்னன்னு கேட்டியா?’’
- சரவணன், கொளக்குடி.



‘‘உடம்பு எப்படிம்மா இருக்கு?’’
‘‘சும்மா ‘நச்’னு இருக்குன்னு எங்க ஏரியா பால்காரர் அடிக்கடி சொல்வாரு டாக்டர்...’’
- சரவணன், கொளக்குடி.

‘‘தலைவரோட மதிப்பு கூடிக்கிட்டே இருக்குன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘தக்காளி விலை செஞ்சுரி அடிச்சாலும், இன்னமும் அவர் பேசற கூட்டத்துல தக்காளிதானே வீசறாங்க!’’
- அ.குணசேகரன், புவனகிரி.

‘ஆச்சரியமா இருக்கே... தலைவர் பேச்சைக் கேட்க இவ்ளோ பெண்கள் கூட்டம் கூடியிருக்கு?’’
‘‘கடைசி வரைக்கும் அவர் பேச்சைக் கேட்கற பெண்களுக்கு அரைக் கிலோ தக்காளி இலவசம்னு அறிவிச்சிருக்காரே!’’
- அ.குணசேகரன், புவனகிரி.