கருத்துடா! கபாலிடா!



தக்காளி விலையுயர்வு பீதியை டைமிங்காகப் போக்கியது நோ தக்காளி சமையல் குறிப்புகள். தக்காளி, செலவு பண்ண முடியலய்யா!
- பி.வெண்மதிகுமார், கோவை.



ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவின் பேட்டி கலர்ஃபுல்! தோற்றத்தை விடவும் உடையின் தரத்தில் அதிக கவனம் செலுத்தும் விஜய்யை யூத்கள் பின்பற்றினால் நல்லது!
- ஜெ.கே.சிவரத்தினம், சென்னை-33.

அட, ‘நெருப்புடா’ பாடல் எழுதியதும் பாடியதும் நம்ம நெருப்பு குமார்தானா? கருத்துடா... மாஸ் சாங்குடா... கபாலிடா... அழுத்தம் கொடுத்தது அவரின் பேட்டி!
- ப.க.ஜோதிமணி, கரூர்.

இந்தியாவில் அமல்படுத்த வேண்டிய மானிய திட்டத்தை சுவிட்சர்லாந்து ட்ரை பண்ணியும் ஃபெயில் ஆயிருச்சே என வருத்தத்தை ஏற்படுத்தியது விநோத ரஸ மஞ்சரி!
- தி.சக்திவேல், ஈரோடு.

அடுத்த 5 வருஷத்துக்கான படங்கள் இப்பவே ரெடியா? ஏகத்துக்கும் ஆச்சரியத்தைக் கிளப்பியது லோ பட்ஜெட் பட அணிவரிசை!
- கே.குள.மாணிக்கவேலன், மதுரை.

சீனு மோகனின் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது மகிழ்ச்சி. கனவுத் தொழிற்சாலையின் மறுபக்கத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது அவரது 17 வருட போராட்ட வாழ்க்கை!
- ம.ஜா.சீனுபிரகாஷ், திண்டுக்கல்.

பேட்டியை எங்கே படிக்க? அனுஷ்காவின் யோகா படங்களே எங்களை மூச்சு வாங்க வைத்து ஏற்றியது குளுகுளு குளுக்கோஸ்!
- மோ.தம்பிகார்த்திக், வேலூர்.

‘டவுன்லோடு மனசு’ பகுதியில் பாரதி கிருஷ்ணகுமார்  தன் வாழ்வு வழியே நமக்குள் தெளித்த சிந்தனைகள் அனைத்துமே வீரிய விதைகள்!
- எம்.ஷேன்முகமது, சென்னை-4. 

புழுதி படிந்த ஊர்களிலும் மாறாத மனித உணர்ச்சிகளை உருக்கமாகப் படம் பிடித்து நெகிழ்த்தும் ‘முகங்களின் தேசம்’ தொடர் ‘குங்குமம்’ இதழின் மகுடம் என்றால் மிகையல்ல!
- அ.ஜீவசங்கமி, திருநெல்வேலி.

ஒவ்வொரு வாரமும் நம்பிக்கையை விதைக்கும் ஒரு வாழ்க்கை, ஒரு திரைப்படம் என ஆத்ம திருப்தி  தரும் தொடராக ‘உறவெனும் திரைக்கதை’ 360 டிகிரியில் அப்ளாஸ் அள்ளுகிறது!
- மு.தா.மதிவாணன் பெருமாள், தூத்துக்குடி.

திங்கள்தோறும் மலரும் ‘குங்குமம்’ எங்களுக்குத் தருகிறது செய்திகளின் சங்கமம்.
- க.கோபு, விழுப்புரம்.

DOWNLOAD மனசு பகுதியில் பாரதி கிருஷ்ணகுமாரின் மனக்குமுறல்கள் மனிதகுலத்தையே சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ஜெ.ஜெயம் ஜெயா, காரமடை.