வாங்க... பட்ஜெட்டில் ஷாப்பிங் செய்யலாம்!



- ஷாலினி நியூட்டன்

அதுசரி தீபாவளி என்றாலே புத்தாடைகள்தானே? அப்படியிருக்க இந்த தீபத் திருநாள் மட்டும் புது ஆடைகள் இல்லாமலா இருக்கும்? புகழ்பெற்ற ஆடை நிறுவனங்கள் என்னென்ன லேட்டஸ்ட் கலெக்‌ஷன்ஸை கொண்டு வந்திருக்கிறார்கள்?
 
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸின் ‘குந்தன் & ஜர்தோஸி சேலை:
இந்த வருட ஜெயச்சந்திரனுடைய சிறப்பே கோல்ட் காயின் ஸ்லோகன் போட்டிதான். ஜவுளி வாங்கும் எவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். படத்தில் காஜல் அகர்வால் உடுத்தியிருப்பது போன்ற காஞ்சிபுரம் பட்டு, ஜம்தானி வொர்க் சேலை, குந்தன் மற்றும் ஜர்தோஸி சேலைகள், டஸ்ஸர் சேலை, தூபியான் சேலைகள்  என விதவிதமான சேலைகளைக் குவித்துள்ளார்கள்.கலம்காரி சேலைகளிலும் விதவிதமான வெரைட்டிகளை ஜெயச்சந்திரனில் காணலாம். இவை தவிர்த்து குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் உடைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

சுந்தரி சில்க்ஸின் ‘மழைச்சாரல் சேலை’: பழங்கால ஃபேஷன் எல்லாம் இப்போது உடைகளிலும் அதிக அளவில் திரும்பிக் கொண்டிருப்பதால் இந்த வருட தீபாவளி ஸ்பெஷலை பழமையைப் போற்றும்விதமாக உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் ரிப் டிசைன் எனப்படும் சேலையில் முத்துப் போன்ற டிசைன்களும், பின்பக்கத்தில் மழைச்சாரல் போன்ற டிசைனையும் கொடுத்திருக்கிறார்கள். விளக்கு வெளிச்சத்தில் இந்தப் புடவை அதிக அளவில் மின்னும். அடுத்து மூன்று கலர் கட்டம் போட்ட சங்க கால ஸ்டைல் சேலை. இப்போதைய கல்லூரிப் பெண்கள் கூட இந்த சேலைக்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்னை சில்க்ஸின் ‘காம்போ கலெக்‌ஷன்’:
சென்னை சில்க்ஸின் இந்த வருட ஸ்பெஷல் ‘ஃபெஸ்டிவல் காம்போ கலெக்‌ஷன்’தான். அதாவது அம்மா - பெண் அல்லது அக்கா - தங்கை என ஒரு மெட்டீரியலை சேலை - சுடிதார் என அணிந்து காம்போவாக கலக்கலாம். இதன் விலை இருவருக்கும் சேர்த்து ரூ.1695ல் இருந்து தொடங்குகிறது. இது தவிர்த்து பெண்களுக்கான ‘விவாகா காட்டெஸ் கலெக்‌ஷன்’ பட்டு புடவைகளும் ஜெகஜோதியாக அணி வகுக்கின்றன.

ராம்ராஜின்  ‘காட்டன் கரை’:
வேஷ்டியில் இருக்கும் கரையின் நிறத்திற்கு மேட்சிங்கான சட்டையுடன் அணிந்துகொள்ளும் ஸ்டைல்தான் இந்த வருட ராம்ராஜ்  ஸ்பெஷல். ரூ.600 முதல் ரூ.2000 வரையிலான விலையில் மொத்தம் 38 நிறங்களில்  இந்த வேஷ்டி - சட்டைகள் கிடைக்கும். இந்த வேஷ்டிகள் சுத்தமான காட்டன் என்பதால் நடக்கும் போது சத்தம் கேட்காது. வண்ணங்களும் இயற்கையான  நிறங்களாகவே இருக்கும். அடுத்து குழந்தைகளுக்கான ஜிப்பா - வேஷ்டி மற்றும் பஞ்சகச்ச ஸ்டைல் வேஷ்டி -  ஜிப்பா. ரூ.995 முதல் முழு செட்டாக கிடைக்கும். இதில் ஜிப்பாவுக்கு  மேட்சிங்கான நிறத்தில் வேஷ்டியில் ஜரிகை இருக்கும். தவிர தங்க நிற கரை  வேஷ்டியும் அணிந்து கொள்ளலாம். இதில் ஐந்து முதல் 18 வயதுள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வெரைட்டிகள் உள்ளன.

RMKV யின் க்ராப் டாப் & ஸ்கர்ட்:
இதுதான் ட்ரெண்ட் என்பதால் இந்தமுறை இளம் பெண்களுக்கான க்ராப் டாப் லாங் ஸ்கர்ட்டை துப்பட்டாவுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பாவாடை மற்றும் துப்பட்டாவுக்கு சம்பந்தம் இல்லாத கான்ட்ராஸ்ட் வண்ணங்களில், பளிச் நிறத்தில், க்ராப் டாப்பை உருவாக்கியிருப்பது ஹைலைட். இதன் விலை ரூ.5 ஆயிரம் முதல் ஆரம்பம். இது தவிர்த்து டஸ்ஸர் மெட்டீரியல் இப்போதைய பெண்களை ஈர்ப்பதால் ‘Wooven’ டஸ்ஸர் சேலைகளும் கண்களைக் கவரும் நிறங்களில் அறிமுகமாகியுள்ளன. மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அத்தனை வயதினருக்கும் புது ட்ரெண்டி உடைகளை இறக்கியிருக்கிறார்கள். 

போத்தீஸின் ‘மஸ்த்கலி சல்வார்’:
நீண்ட கவுன் பாணியில் இருக்கும் சல்வார். கிராண்ட் லுக். அதே சமயம் மேக்ஸி பாணியில் மாடர்ன் லுக்கும் கொடுக்கும் சல்வார் என்பதால் இளம் பெண்கள் இதற்கு டிக் அடிக்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்காகவே ‘கேண்டி க்ரஷ்’ என்னும் கலெக்‌ஷன்களில் பண்டிகைக்கால கிராண்ட் லுக் உடைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 3 முதல் 14 வயது வரை இந்த கேண்டி க்ரஷ் உடைகள் உள்ளன.

ரதி சில்க்ஸின் ‘ஜரிகை ஃப்ராக்’:
இம்மூறை இவர்களுடைய டார்கெட் குழந்தைகள்தான். தளதள பாவாடையை அணிந்து கொண்டு ஓடவும் முடியாமல், விளையாடவும் முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்காகவே ஜரிகை மற்றும் சிந்தடிக்கில் ஃப்ராக் ஸ்டைல் உடைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்த உடையை மூன்று மாதக் குழந்தை முதல் ஆறு வயது சிறுமி வரை அணியலாம். விலையும் ரூ.360 முதல் ரூ.420 வரை மட்டுமே. இவை மட்டுமின்றி புடவைகளை அடிப்படையாகக் கொண்ட பட்டுப் பாவாடை சட்டைகளும் அரிஷ்யா சில்க்ஸ் என்னும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் விலை ரூ.2200 முதல் ரூ.4400 வரை.