கிளாமரா நடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? : பட்டியலிடுகிறார் ரெஜினா



நீச்சலுடையில் ரெஜினா கஸாண்ட்ரா!இதுநாள்வரை தெலுங்குக்கு மட்டுமே கிடைத்துவந்த ‘தாராளமயம்’, இப்போது தமிழுக்கும் டவுன்லோடாகிவிட்டது. யெஸ்.  ‘ஏதேதோ ஆனேனே... எல்லாமே நீதானே...’ என ‘மிஸ்டர் சந்திரமௌலி’க்காக கடலில் துள்ளிக்குதித்த ஹாட் டால்ஃபினாக கோலிவுட்டை கிறுகிறுக்க  வைத்திருக்கும் ரெஜினாவிடம், ‘‘அப்ப இனி தொடர்ந்து உங்ககிட்ட கிளாமரை எதிர்பார்க்கலாமா?’’ என்றால் முறைக்கிறார்!‘‘எனக்குப் பிடிக்காத வார்த்தை  கிளாமர்! ஸ்விம் சூட்ல நடிக்கறது அவ்வளவு ஈசி இல்ல. அந்த உடை ஃபிட் ஆகற உடல்வாகு இருக்கணும்.
அதுக்கு கண்டிப்பா நாம ஃபிட் ஆக இருந்தாகணும்!  இதுக்கு வெறும் யோகா போறாது. தினமும் ரெண்டு மணி நேரம் நீச்சலடிக்கணும். கடுமையா டயட் மெயின்டெயின் பண்ணணும். உதாரணத்துக்கு ஒரு  இன்ஸிடென்ட் சொல்றேன். தெலுங்குல ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ பட ஷூட் அமெரிக்காவுல ஒரு மாசம் நடந்தது. யூனிட்ல அத்தனை பேரும் அங்குள்ள  வெரைட்டி ஃபுட்ஸை செம கட்டு கட்டினாங்க. என்னால வேடிக்கை மட்டுமே பார்க்க முடிஞ்சுது! எதுக்காக சொல்றேன்னா, அவுட்டோர்ல இஷ்டத்துக்கு சாப்பிட  முடியாது. இது மாதிரி நிறைய தியாகம் செய்தாகணும்...’’ என ஆதியோடு அந்தமாக கிளாமரில் இருக்கும் சிரமங்களைப் பட்டியலிடுகிறார் ரெஜினா.

தெலுங்குல வெளியான ‘ஆவ்’ படத்துல முதுகு, கைகள்ல எல்லாம் டாட்டூ வரைஞ்சு போதைக்கு அடிமையான பெண்ணா கலக்கியிருந்தீங்க...

தேங்க்ஸ்! சின்ன படம், பெரிய படம், ஷார்ட் ஃபிலிம்னு எல்லாம் பார்க்கறதில்ல. என் கேரக்டர் எப்படி, ஸ்கோப் இருக்கானு மட்டும்தான் பார்ப்பேன். ‘ஆவ்’வுக்கு  நிறைய பாராட்டு கிடைச்சது. ஆக்சுவலா அந்த கேரக்டருக்காக கடுமையா உழைக்க வேண்டி இருந்தது.ஒருநாள் மாலை நாலு மணிக்கு தலை முடியை ஷேவ்  செஞ்சு தலைக்கு பின்னாடி டைமண்ட் கட் பண்ணி, உடம்புல மூணு இடங்கள்ல டாட்டூஸ் வரைஞ்சு முடிக்க மறுநாள் மாலை ஆகிடும்! அதாவது தொடர்ந்து 24 மணி நேரம். இடைல ரெண்டரை மணிநேரம் தான் உட்கார்ந்த இடத்துலயே தூங்க முடிஞ்சுது. குளிச்சா டாட்டூஸ் மறைஞ்சுடும். ஸோ, டவல் பாத் மட்டும்தான் சாத்தியம். இப்படித்தான் என்  ஷெட்யூலை நடிச்சு முடிச்சேன். அந்த உழைப்புக்கு பாராட்டு கிடைக்குது. ஹேப்பியா இருக்கு.

முதல் படமான ‘கண்ட நாள் முதல்’ல நடிக்கிறப்ப நீங்க ஸ்கூல் ஸ்டூடண்ட் போல..?


ஆமா. சின்னவயசுலயே நடிக்க வந்துட்டேன். நாலாவது படிக்கிறப்ப ஒரு ஃபங்ஷனுக்கு அம்மா கூட்டிட்டுப் போனாங்க. அதுக்காக க்யூட் ஏஞ்சல் போல எனக்கு  டிரெஸ் செய்திருந்தாங்க. அங்க வந்திருந்த ஒரு விளம்பரப் பட இயக்குநர், ‘உங்க பொண்ண நடிக்க வைக்கலாமே’னு சொல்லி தன் விளம்பரப் படத்துலயே  நடிக்க வைச்சார். அப்புறம் ‘ஸ்ப்ளாஷ்’ கிட்ஸ் சேனல்ல காம்பியரா இருந்தேன். இதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சதுதான்.14 வயசுல டான்ஸ், ஆக்டிங்ல  ஆர்வம் வந்தது. ‘கண்டநாள் முதல்’ படத்துக்கு அப்புறம் படிப்புல கவனம் செலுத்தினேன். டிகிரிக்கு சைக்காலஜியை தேர்வு செஞ்சேன். செகண்ட் இயர்  படிக்கிறப்ப கன்னடப் பட வாய்ப்பு வந்தது. நடிச்சுட்டு படிப்பை தொடர்ந்தேன். ஃபைனல் இயர்ல ஷார்ட் ஃபிலிம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். டிகிரி முடிச்சதும்  தெலுங்குல வாய்ப்பு வந்தது. அங்க ஒரு படம் முடிச்சதும் தமிழ்ல இன்னொரு படம் கிடைச்சது. அப்படியே பிசியாகிட்டேன்!

ரெஜினாவின் பர்சனல்..?


வீட்ல செல்லமா ‘ஸ்வீட்டி’னு கூப்பிடுவாங்க. ஸ்கூல், காலேஜ்ல ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். ட்ெரக்கிங், பாஸ்கட்பால், வாக்கிங் பிடிக்கும். ஜிம் போகப்  பிடிக்காது. பிடிச்ச ஸ்பாட் ஃபிஜித்தீவு. அங்க நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. இண்டஸ்ட்ரில நெருங்கிய தோழி, ரகுல் ப்ரீத் சிங்!

- மை.பாரதிராஜா